ஜோகன்னஸ்பர்க்:""நாய்களை வளர்ப்பது வெள்ளையர்களின் வழக்கம். இதை கருப்பர்கள் பின்பற்றுவது நல்லதல்ல,'' என தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.தென் ஆப்ரிக்கா, ஆங்கிலேயர்களிடமிருந்து, 94ல் சுதந்திரம் பெற்றது. நெல்சன் மண்டேலா தலைமையில் போராடி அந்நாட்டு மக்கள் விடுதலை பெற்றனர். ஆனால், இன்னும் அவர்களுக்கு ஆங்கிலேயர்கள் மீதான கோபம் தணியவில்லை.தென் ஆப்ரிக்காவின், தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா,70. இவருக்கு, ஆறு மனைவிகள்; 20 குழந்தைகள் உள்ளனர். இந்த ஆண்டு, கடைசியாக, ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தென் ஆப்ரிக்காவில் நடந்த, ஒரு நிகழ்ச்சியில், பழங்குடியினர் உடையில் வந்து, அதிபர் ஜுமா பேசியதாவது:மைனாரிட்டிகளான, ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளை பின்பற்றுவது தான் நாகரிகம் என்ற, கருத்தை இளைஞர்கள் விட்டொழிக்க வேண்டும். சுருண்ட கூந்தலை நீட்டிக்க, வாசனை களிம்புகளை தடவுவதால், நீங்கள் வெள்ளையர்களாக மாறி விட முடியாது.
வீட்டில் நாய் வளர்த்து, அதை, "வாக்கிங்' கூட்டி செல்வது, அதை குளிப்பாட்டுவது, டாக்டரிடம் அழைத்து செல்வது என்பதெல்லாம், ஆப்ரிக்க மக்களுக்கு அழகல்ல. தன் வீட்டில் நோயுற்ற மனிதரை கவனிக்காமல், நாய்க்கு உடம்பு சரியில்லை என்பதற்காக அதை மருத்துவமனைக்கு கூட்டி செல்வது மனிதாபிமானமற்ற செயல். நான் இதை சொல்வதால், விலங்குகளை எதிர்க்கிறேன் என்று பொருள் அல்ல;மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று தான் வற்புறுத்துகிறேன்.பிரச்னைகளுக்கு ஆப்ரிக்கர்களின் வழியில் தான் தீர்வு காண வேண்டும். இதற்காக வெள்ளையர்களின் வழியை பின்பற்றக்கூடாது.இவ்வாறு ஜுமா பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பல மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டால் தினம் தினம் மருத்துவமனைக்கு யாரையாவது ஒருவரை மாற்றி மாற்றி அழைத்துச் செல்லத்தான் வேண்டும் என்ன செய்வது? அதுவும் ஒன்றா இரண்டா இருபது குழந்தைகள், இவர் கூறுவது உண்மைதான், இவருடைய பார்வையில் இவர் கூறுவது சரியே இதை நாமும் பின்பற்றவேண்டுமா என்பதை அவரவர் விருப்பம், வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.