யாங்கூன்: மியான்மர் நாட்டின், ஜனநாயக தலைவர், ஆங் சாங் சூகி, தயாரித்த ஸ்வெட்டர், 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது."பர்மா' என அழைக்கப்பட்ட, மியான்மர் நாட்டின், எதிர்கட்சி தலைவர், ஆங் சாங் சூகி. மியான்மரில் ஜனநாயகம் கோரி போராடியதற்காக, பல ஆண்டுகள், வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நோபல் பரிசு பெற்ற சூச்சி, தற்போது, அந்நாட்டின், எம்.பி.,யாக உள்ளார்.லண்டனில் இவர், 30 ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் வசித்த போது, வேலைகளுக்கு இடையே, ஸ்வெட்டர் பின்னும் வழக்கத்தை கொண்டிருந்தார். இப்படி இவர் தயாரித்த, மூன்று ஸ்வெட்டர்கள், யாங்கூன் நகரில், சூகியின் ஜனநாயக லீக் கட்சியினரால் ஏலம் விடப்பட்டது.ஏழை குழந்தைகளின் கல்விக்கு, நிதி திரட்டுவதற்காக, இந்த ஸ்வெட்டர்கள் ஏலம் விடப்பட்டன. மூன்று லட்ச ரூபாய்க்கு ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில், 25 லட்ச ரூபாய்க்கு மூன்று ஸ்வெட்டர்கள் விலை போயின.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.