பீஜிங்:சீனாவில், புத்தாண்டு தினத்தையொட்டி, பாலிவுட் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லை தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும், வர்த்தக ரீதியான உறவுகள் மேம்பட்டுள்ளன. கலாசார ரீதியான உறவுகளை மேம்படுத்த, மத்திய அரசு, நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.இதற்கிடையே, சீனாவின் பல்வேறு நகரங்களில், பாலிவுட் நடன குழுவினரின் கண்கவர் நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. இதற்காக, சுருதி மெர்சன்ட் மற்றும் அவரது சகோதரி வைபவி ஆகியோர் தலைமையில், 47 பேர் கொண்ட குழு, சீனா சென்றுள்ளது.பீஜிங் நகரில் நடக்கும் இவர்களது, 5 மணி நேர நிகழ்ச்சிகள், சீனாவின் தேசிய, "டிவி'யான "சி.சி.டிவி'யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான, 80 சதவீத டிக்கெட்டுகள் விற்றுள்ளன.சீனா சென்றுள்ள இந்த நடன குழுவினர், ஐந்து நகரங்களில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.