Gangai Amaran done negotiating to buy the property? In response to the special court Sudhakaran | கங்கை அமரன் சொத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? சிறப்பு கோர்ட்டில் சுதாகரன் பதில்| Dinamalar

கங்கை அமரன் சொத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? சிறப்பு கோர்ட்டில் சுதாகரன் பதில்

Added : டிச 29, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களுரு:""தமிழக முதல்வர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு, 7 கோடி ரூபாயா என்பது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது,'' என, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், சுதாகரன் கூறினார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மூன்றாவது நாளாக, நீதிபதி பாலகிருஷ்ணா கேட்ட கேள்விகளுக்கு, சுதாகரன் பதிலளித்தார். கடந்த இரண்டு நாட்களில், 322 கேள்விகள், நேற்று, 125 கேள்விகள் என, இதுவரை, 447 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.


சுதாகரன் அளித்த பதில்:சென்னை தி.நகர், பத்மநாப நகரிலுள்ள கட்டடம், 20.34 லட்சம் ரூபாய், சென்னை ஸ்ரீராம் நகர், 80 அடி ரோட்டிலுள்ள கட்டடம், 20.57 லட்சம் ரூபாய், மகாபலிபுரம் ரோட்டிலுள்ள கட்டட மதிப்பு, 53.11 லட்சம் ரூபாய், சோளிங்கநல்லூர் கட்டடம், 80.37 லட்சம் ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், விசாரணை அதிகாரிகள், உண்மையான மதிப்பை விட அதிகமாக மதிப்பிட்டுள்ளனர். எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல், அரசு அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


போயஸ் கார்டன் வீட்டை, பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் ஆய்வு செய்து, அதன் மதிப்பு, 7 கோடியே, 93 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயித்தது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது.
மந்தை வெளி, புனித மேரி தெருவிலுள்ள பழைய வீட்டை, 18 ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து இடித்தது பற்றியும் தெரியாது. கோபால் புரமோட்டர்ஸ் கம்பெனியில், ஜெயலலிதா, சசிகலா, நான், இளவரசி ஆகியோர் இயக்குனர்கள்.


இசை அமைப்பாளர் கங்கை அமரன் சொத்தை வாங்குவதற்கு, எங்கள் கம்பெனி இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி எனக்கு தெரியாது.சென்னை, தி.நகரிலுள்ள சுப்புலட்சுமி கல்யாண மண்டபம் எங்களுக்குரியது. ரிவர்வே ஆக்ரோ புராடக்ஸ் நிறுவனத்துக்காக, பவர் ஏஜென்ட் சிவா மூலமாக, ஒன்பது இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டன. மெடோ பார்ம் கம்பெனிக்காக, ஐந்து இடங்களில் நிலம் வாங்கினோம்.


சசிகலா, நான், இளவரசி ஆகியோர் இயக்குனர்களாக உள்ள கொடநாடு டீ எஸ்டேட்டிலிருந்து, பங்குதாரராக உள்ள குணபூசணி, தான் விலகி கொள்வதாக, கனரா வங்கியில் கடிதம் கொடுத்தது உண்மை.மைலாப்பூர் கனரா வங்கியில், எனக்கு கணக்கு உள்ளது. எங்களின் நிறுவனங்களுக்காக வாங்கப்பட்ட சொத்துகளில், எனக்கு தனிப்பட்ட ஆர்வம் எதுவுமில்லை.இவ்வாறு நீதிபதியின் கேள்விகளுக்கு, சுதாகரன் தயக்கமின்றி ஆங்கிலத்தில் பதிலளித்தார்.கேள்விகள் முடிவடையாததால், இன்றும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - cbe,இந்தியா
31-டிச-201215:18:59 IST Report Abuse
krishna நில ஆக்கிரமிப்பை ஆரம்பிச்சதே இவனுங்க தானே.இந்த கொள்ளை கூட்டத்தை ஒழிப்பது யார்
Rate this:
Share this comment
Cancel
Mohi - Chennai,இந்தியா
29-டிச-201213:34:28 IST Report Abuse
Mohi கருணாநிதி ஊழல் செய்தார் என்று சொல்ல இந்த கூட்டத்திற்கு எந்த அருகதையும் கிடையாது. இவர்கள் தன் மீதுள்ள குற்றத்தை மறைக்க யார் மீதும் பலி போடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
29-டிச-201213:00:35 IST Report Abuse
தஞ்சை மன்னர் இனி உங்களிடம் எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்ற பதில்தான் வரும் ஏனெனில் நீதிபதி பதவி உயர்வும் சம்மதம் பெரும் அதிகாரம் சார்ந்தவரின் ஆட்சி நடைபெறுகிறது என்ன செய 12 வருடத்தில் இனி ஆதாரம் இருக்க விட்டு இருப்பிர்கள் , மக்கள் வேடிக்கை பார்க்கும் சமயமல்லவா இது ? நடத்துங்கள் நடத்துங்கள் உங்கள் பகுதி நாடகத்தை , காட்சிகள் மாறும்போது கோலங்கள் மாறவேண்டியது தானே வாடிக்கை ? ராஜா நரசிம்மா விவேக் தஞ்சை
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-டிச-201212:48:24 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஜட்ஜ் : "கங்கை அமரன் சொத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா" ? சுதாகரன் மற்றும் உடன்பிறவா கும்பல்: "அப்பட்டமான பொய் யுவர் ஆனர்.. அதை அடித்துப் பிடுங்கத் தான் திட்டம்.."
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
29-டிச-201205:10:13 IST Report Abuse
ganapathy இவனுங்களும் அநியாயமா அடுத்தவன் சொத்தை கொள்ளியடிக்க தான் முயற்சி பண்ணி இருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-டிச-201203:09:42 IST Report Abuse
தமிழ்வேல் சென்னை தி.நகர், பத்மநாப நகரிலுள்ள கட்டடம், சென்னை ஸ்ரீராம் நகர், 80 அடி ரோட்டிலுள்ள கட்டடம், மகாபலிபுரம் ரோட்டிலுள்ள கட்டட மதிப்பு, சோளிங்கநல்லூர் கட்டடம், இவைகள் மட்டுமே ஒவ்வொன்றும் 100 கோடிக்கு மேல் பொருமெ ? இதுவன்றி ஒன்பது இடங்களில் சொத்து ஐந்து இடங்களில் நிலம் பல கம்பெனிகள் தோட்டங்கள் கண்ணு கட்டுது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை