Advertisement
வடகிழக்கு மாநிலங்களை, "வேவு' பார்க்க அனுமதிக்க மாட்டோம்: வங்கதேசம் உறுதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,01:28 IST

சில்சார்:""இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்திலுள்ள, சில பிரிவினைவாத குழுவை சேர்ந்தவர்கள், வங்கதேசத்திலிருந்து வேவு பார்க்க, எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம்,'' என, இந்தியாவுக்கான வங்கதேச துணை ஹை கமிஷனர், அபிதா இஸ்லாம் கூறினார்.இந்திய - வங்கதேச நட்புறவு அமைப்பு சார்பில், அசாம் மாநிலம், சில்சாரில் நடந்த கூட்டத்தில், பங்கேற்க வந்த அபிதா இஸ்லாம், நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின், வடகிழக்கு மாநிலங்களில், ஊறு விளைவிக்கும் நடவடிக்கையில், சில பிரிவினைவாத குழுக்கள் செயல்படுவது பற்றி, எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த பிரச்னையை மிகவும் உன்னிப்பாக அணுகுகிறோம்.


இந்தியாவுக்கு எதிரான, பிரிவினைவாத நடவடிக்கைகள், வங்கதேசத்திலிருந்து அரங்கேறுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.இது தொடர்பாக, போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வங்கதேசத்தின் சிறந்த நட்பு நாடுகளில், இந்தியாவும் ஒன்று. 1971ல் வங்கதேச சுதந்திர போராட்டத்துக்கு, இந்தியா அளித்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்.
இந்தியாவுடன் தொழில் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில், நம்பிக்கை கொண்டு உள்ளோம். இரு நாடுகளுக்கு இடையே, விசா கொள்கைகளில் சீர்திருத்தம் செய்ய, அடுத்த மாதம் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். இந்திய உள்துறை அமைச்சர், அடுத்த மாதம் வங்கதேசம் வரும்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.இவ்வாறு, அபிதா இஸ்லாம் கூறினார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
ganapathy - khartoum,சூடான்
29-டிச-201205:13:40 IST Report Abuse
ganapathy இவனுங்கா தான் எல்லைதாண்டி இந்தியாவுக்கு வந்து தங்கிடறாங்க. இந்த எல்லை வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.