மாணவி உடல் பிரேத பரிசோதனை:
உயிரிழந்த மருத்துவம மாணவியின் உடல் பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்நாட்டு இந்திய தூதரகத்துடன் இந்தியா அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு:
மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் போராட்டங்கள் நடந்து வரும்
அமைதி காக்க வேண்டுகோள்:
இந்த சம்பவத்தை அடுத்து அனைவரும் அமைதி காத்திட வேண்டும் என டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கிட அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள்ன என்றார்.
மாணவியின் ஆசை என்ன ? :
16 ம் தேதி தாக்குதலுக்குள்ளான மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போது முதன்முதலாக அவரை தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர் பேசுகையில்: நான் வாழ விரும்புகிறேன் அம்மா., என்னை இந்த கொடுமைக்கு ஆளாக்கிய இந்த நபர்களை சட்டத்தி்ன் முன் நிறுத்தி எனக்கு நீதி கிடைக்க வேண்டும் அம்மா என்றாராம்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது உடல் புதுடில்லி வந்தது.புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குற்றம் செய்த இந்த 6 நபர்கள் மீது மட்டும் தவறு கிடையாது, இந்தியாவில் உள்ள ஒரு ஒரு தனிமனித பங்கும் உள்ளது, எங்கு எல்லாம் கலாசார சீர் கெடும் , பாலியல் தூண்டும் ஆடை அலங்காரம் மற்றும் ஆபாச படம் மற்றும் விபசார விடுதி வந்தோ பொது எல்லாம் நாம் சும்மா இருந்தோம், உணர்ச்சியை தூண்டினோம், அதை தனித்து கொள்ளும் இடம் அருகில் இல்லை , அதனால் அவன் கிடைத்த இடத்தை பயன் படுத்தி கொண்டான், ஆரம்பத்தில் நாம் செய்த தவறு இந்த ஒரு கற்பழிப்பு மூலமாக நிற்க்காது, என்ன தான் சட்டம் போட்டாலும் இன்னமும் பல பெண்கட்பு சூறை ஆடபடுவதை யாரும் தடுக்க முடியாது, மாறாக சமுதாய சிந்தனை கொண்டு ஒரு ஒரு தனிமனிதன் திருந்தனும், நாகரீகம் என்கிற போர்வையில் நடக்கும் அக்கிரமங்களை தடுக்கணும், மதியில் காம மது உண்டவனுக்கு எல்லா பெண்களும் ஒன்றுதான், அந்த போதை அவனுக்கு கொடுத்தது நாம், சட்ட படி கொடுக்கும் தண்டனை இனி நடக்க போகும் தவறை திருத்தாது, ஒரு வேலை கற்பு அழிப்பவன் சுய பாதுகாப்பு கருதி, இனி கொலை செய்ய வேண்டும் என ஆழமாக சிந்திப்பான், ஆணும் பெண்ணும் கூட்டாக ஒழுக்கமுடன் உடை அணியணும், இது தான் ஆரம்பம், சினிமா ஆபாசம் வந்தால் அதை சீர்தூக்கி பார்க்கும் அறிவை நாம் இன்னனும் வளர்க்க வில்லை, நடிகை போல் நம்ம வீட்டு பெண்ணும் உடை அணிந்தால் நடிகை கற்பு காசுக்கு போவதை போல நம் வீட்டு பெண்கள் கற்பு ரோட்டில் போகும், காரணம் நாம் ,, திருந்துங்கடா ,,,
அந்த இளம் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன் . என்ன பாவம் செய்தாள் இந்த பெண்? ...மிக வருத்தம் தரும் செய்தி இது.... கல்லூரிக்கோ, பள்ளிக்கோ அனுப்பிவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றிலே பெண்ணை பெற்ற தகப்பனும் தாயும் தீயில் நிற்பது போல இருக்கிறார்கள்.. நெருப்பை கட்டி கொண்டு இருக்க வேண்டி உள்ளது. நடைபெறும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை நிம்மதி இல்லாமல் ஆக்கிகொண்டுள்ளது. வெறும் மரண தண்டனை மட்டுமே தீர்வாகிவிடாது. தனி மனித ஒழுக்கம் பேணிக்காக்கப்பட வேண்டியது அவசியம்... நேற்று இன்று நாளை என பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இளம் பெண்களும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. ஒவ்வொரு இளைஞனும் சக இளம் பெண்களை சகோதரிகளாக பாவித்துப் பழக வேண்டியது அவசியம்..நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத்தர வில்லை இன்றைய கல்வி நிலையங்கள்..பெற்றோர்களும் பிள்ளைகளை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா...இது மாதிரியான கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கட்டும்..தவிரவும் சட்டங்களும் நீதியும் மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியமும் நேர்ந்துள்ளது.இதுவே தருணமாக அமையட்டும்.
அன்புள்ள தினமலர் ஆசிரியர் அவர்களுக்கும், எனது அருமை இந்திய அரசாங்கத்திற்கும் வேண்டுகோள், எங்கள் கருத்துக்களை தலைப்பு செய்திகளில் வெளியிடுங்கள், நான் தற்போது வசிக்கும் சிங்கப்பூரில் யாவரும் பேசும் பேச்சு இந்திய அரசாங்கம் இந்த கொடூர குற்றவாளிகளை என்ன செய்யபோகிறது. இதன் மூலம் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நாடா, இல்லையா என்று தெரிந்துவிடும். உலகம் ஆவலோடு எதிர் பார்க்கும் இந்த தீர்ப்பின் மூலம் இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய துணிய மாட்டார்கள். ஒவ்வொரு இந்தியனும் அவமானப்படதக்க வகையில் டெல்ஹியில் நடந்த இந்த கொடூர மானபங்கம், மாணவியின் கொலை இந்திய அரசாங்கத்தின் தீர்ப்புகளில் உலகம் அறிந்துகொள்ளட்டும். பத்திரிக்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் உரிமை பெற்றவை. உங்கள் விமர்சனம் எங்கள் எதிர்பார்ப்பு, இல்லை நீங்களும் அரசியல் வாதிதான் என்றால், உங்கள் வீட்டிலும் நாளை இது நடக்கும், அப்போதும் மௌனமாக இருங்கள்.
ஒவுவொரு இந்தியனுக்கும் மொத்த உயிர் நாடியும் துடிக்குதே. பெற்றவர்களுக்கு என்ன பாடுபாடும். எல்லா பெற்றோரும் தந்தையாக, தாயாக இருந்தால், பிள்ளைகள் படித்து, வேளைக்கு போய், திருமணம் முடிந்து பேரன், பேத்திகளுடன் வாழ எப்படி எல்லாம் கற்பனையில் இருந்திருப்பார்கள். அவர்களை எப்படி தேற்றுவது. நாம் நம்மை பொறுத்தவரை அந்த பிஞ்சு பெண் மறைவு, அந்த பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்ற முடியும். தவறு செய்தவர்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனை போல் பொது இடத்தில கட்டி வைத்து, அனைவரும், தப்பு செய்தவர்களை கல்லால் அடித்து சிறுக, சிறுக கொள்ள வேண்டும். அதை உலகத்தில் உள்ள எல்லா டிவி, இன்டர்நெட், எல்லாவற்றயும் live ஆக போடவேண்டும். உலகத்திற்கு நாம், இந்தியர்கள் குடும்பம், பெண்மைக்கு மரியாதையை கொடுபவர்களாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக இதை செய்ய வேண்டும். இந்த சூழலிலும் ஜனநாயகம், சட்டம், மனிதாபிமானம், கோர்ட்டு, வழக்கு, No Arguments, No Low, NO Manitha Urimai Sattam, Only punishment. ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.