சேலம்: சேலத்தில், பந்தயத்துக்காக, ஆற்றில் குதித்தவரின் வயிற்றை கண்ணாடி துண்டு பதம் பார்த்ததில், குடல் சரிந்தது.சேலம், வீராணம் அருகே, தெலுங்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால், 45. பால்மார்க்கெட்டில், காய்கறி வியாபாரம் செய்து வரும் இவருக்கு மணியம்மாள், 35, என்ற மனைவியும், அமுதா, 15, என்ற மகளும் உள்ளனர்.நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, நண்பர்களிடம், 10 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி, திருமணிமுத்தாறில் குதித்துள்ளார். அப்போது, சாக்கடை நீரில் புதைந்திருந்த கண்ணாடி துண்டு, அவரது வயிற்றை பதம் பார்த்தது.ஜெயபால், அதை பொருட்படுத்தாமல் கண்ணாடி துண்டை வெளியே எடுத்த போது, குடல் வெளியே வந்துவிட்டது. ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, ஆப்ரேஷன் செய்து, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து, சேலம் டவுன் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.