வீராணம்: வீராணம் அருகே, கட்டிட தொழிலாளியை தாக்கி, வழிப்பறி செய்ய முயன்ற வாலிபர் நேற்று, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.சேலம், அம்மாபேட்டை காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன், 28. கடந்த, 18ம் தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த அவரை, மணிகண்டன், 21, கோவிந்தராஜ், 25, ஆகியேõர் வழிமறித்து, மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தியாகராஜன், பணம் தர மறுத்ததால், அவரை சரமாரியாக தாக்கி விட்டு, இருவரும் தப்பியோடி விட்டனர்.படுகாயமடைந்த தியாகராஜன், ஃபோன் மூலம் வீராணம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், தியாகராஜன், அவரது தம்பி கிருஷ்ணன், 26, கிருஷ்ணனின் மனைவி மல்லிகா, ஒன்றரை வயது மகன் சஞ்சய் ஆகியோருடன் சென்று, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றனர். அங்கிருந்த பொதுமக்கள், மூவரையும் காப்பாற்றினர். தகவல் அறிந்த வீராணம் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அவர்களை சமாதானம் செய்தனர்.தொடர்ந்து, கொலை முயற்சி உள்பட, நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை கைது செய்தனர். தலைமறைவான மணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று, சேலம் ஜே.எம்., எண்- 4 நீதிமன்றத்தில், சரணடைந்தார். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதையடுத்து, சேலம் மத்தியசிறையில், மணிகண்டன் அடைக்கப்பட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.