வாழப்பாடி: பேளூர் பேரூராட்சி நிர்வாகம், கவுன்சில் கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகளை மறைப்பதாக கூறி, அ.தி.மு.க., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் எட்டு பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பேளூர் பேரூராட்சி தலைவராக ராஜேந்திரனும், துணைத்தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த லதாவும் பதவி வகித்து வருகின்றனர். பேளூர் பேரூராட்சியின் சாதாரணக்கூட்டம், பேரூராட்சி கவுன்சில் கூட்ட அரங்கில், நேற்று காலை நடந்தது.பேரூராட்சி செயல்அலுவலர் ராஜாஆறுமுகம் வராததால், கூட்டத்தை ஒத்திவைக்கப்போவதாக, பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார். அதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தம்பிதியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, பாபு, குழந்தைவேல், சுசீந்திரன், செல்வி, மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் சக்திவேல், செந்தில்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதையடுத்து, பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், கவுன்சில் கூட்டத்தை துவக்கினார். பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் ராஜாஆறுமுகம் ஆகியோர், வரவு, செலவு கணக்குகளை பேரூராட்சி கவுன்சில் கூட்ட அஜெண்டாவில் சேர்க்காமல் மறைப்பதாகவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தம்பிதியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, பாபு, குழந்தை÷வல், சுசீந்திரன், செல்வி, மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் சக்திவேல், செந்தில்குமார் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,""அனைத்து திட்டப்பணிகளும் முறையாக நடந்து வருகிறது. அனைத்து வரவு செலவு கணக்குகளும் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சில கவுன்சிலர்கள் ÷வண்டுமென்றே, தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.