சேலம்: "நாளை காலை சேலம் வரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், மாலையில் நடக்கும் சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்கவும், அனைத்து தொண்டர்களும், இளைஞரணியினரும் வரவேண்டும்' என, சேலம் மாவட்ட தி.மு.க., கழக பொறுப்பாளர் சிவலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:சேலம் மாவட்டத்துக்கு, தி.மு.க., பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான ஸ்டாலின், நாளை(டிசம்பர் 30) காலை, 4 மணி அளவில், ஏற்காடு எக்ஸ்பிரஸில் வருகிறார். அதிகாலை, 4 மணிக்கு, சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில், இருவர்ண கொடியேந்தி, எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும். வரவேற்பு நிகழ்ச்சியில், அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.அன்று மாலை, 5 மணிக்கு, சேலம் ஜவஹர் மில் திடலில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.இதில், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளைக்கழக மற்றும் சார்பு அணியை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தோழர்களும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.