சேலம்: ""லஞ்சம், ஊழலுக்கு எதிரான சேவை பெறும் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கு சேலத்தில், நாளை (30ம் தேதி) நடக்கிறது,'' ஐந்தாவது தூண் அமைப்பாளர் ராஜமாணிக்கம் கூறினார்.அவர் கூறியதாவது:அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள லஞ்சம், ஊழலுக்கு எதிராக, சேவை பெறும் உரிமை சட்டம் மத்திய பிரதேசம், பீகார், கர்நாடகா, பஞ்சாப் உட்பட, 14 மாநிலங்களில் அமலில் உள்ளது. மனு கொடுத்த, ஏழு நாளில் அந்த மாநில மக்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கிறது. 15 நாளில் பட்டா கிடைக்கிறது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சேவையை முடிக்காத அரசு அலுவலர்களுக்கு அபராதம் திக்கப்படுகிறது.எனவே, சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும். இது தொடர்பாக, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணி துவங்கியுள்ளது. இதுவரை, 20 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழலுக்கு எதிரான சேவை பெறும் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கு சேலத்தில், நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதில், கோ-ஆப்டெக்ஸ் ÷மலாண்மை இயக்குனர் சகாயம் பங்கேற்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.