What is the solution? | பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்குத் தீர்வு என்ன? | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்குத் தீர்வு என்ன?

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை கடவுளாக போற்றும் நமது நாட்டில் ஏன் இந்த நிலை? நமது கலாச்சாரம் முறையாக பாதுகாக்கப்படவில்லையா? இத்தகைய சீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிதான் என்ன? இன்னும் நாம் பழங்கால சட்டங்களையே பின்பற்ற போகிறோமா அல்லது மாற்றம் தான் பிரச்னைக்கு தீர்வா என இந்திய கிரிமினல் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம். ஏதாவது பிரச்னை வரும்போது தான் இதன் வலிகள் நமக்கு உணர முடிகிறது. மனித ஒழுக்கம் குறையும் போது குபீரென பிரச்னைகள் உருவெடுக்கின்றன. நாட்டில் நாள்தோறும் எத்தனையோ குற்றங்கள் நடந்து வந்தாலும் , ஒரு சில குற்ற நடவடிக்கைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதுடன் அனைவராலும் பேசக்கூடிய விஷயமாகி விடுகிறது. காரணம் சம்பவத்தின் தன்மை மற்றும் கொடூர செயல் ஆகியனதான். என்றாலும் பாதிக்கப்பட்ட விஷயம் விழிப்புணர்வு காரணமாக விஸ்வரூபமெடுக்கிறது. இதற்கு சான்றுதான் டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு. போதையில் இருந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர் மீது திணிக்கப்பட்ட இந்த கொடூரம் அனைவரையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் உயிர் பிழைத்து விடுவாரா என்ற ஏக்கம் இந்தியா முழுவதும் எழுந்தது. ஆனால் அவர் இன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.
இது போன்ற சோகத்திற்கும் , கொடிய விஷயத்திற்கும் முடிவு கட்ட வேண்டுமாயின் என்ன நடவடிக்கை இருக்கலாம் ? சில நாடுகளைப் போல கண்ணுக்கு கண், கல் வீசி கொல் என்று கொண்டு வர முடியுமா இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் இது ஒன்றி போக முடியுமா? அப்படியானால் என்ன தான் தீர்வு ? சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது . இது போன்ற வாசகர்கள் எண்ணம் என்ன என்பதை அறிய தினமலர் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் தாங்களும் தங்களின் கருத்துக்களை கீழக்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.http://www.juxt360.com/pol/home.php?rfr=dintam

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesh - chennai,இந்தியா
31-டிச-201217:17:00 IST Report Abuse
ganesh வீட்டில் கரப்பான் பூச்சி வந்தால் என்ன செய்வோம் அதை நசுக்கி தூக்கி எறிவோம் சோறு போட்டா வளர்ப்போம்
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
31-டிச-201214:25:30 IST Report Abuse
christ இந்த பால போன சினிமாவால் தான் வயசுபசங்க பாலியல் தூண்ட பட்டு சமுகத்தை கெடுக்கறது
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
31-டிச-201214:08:31 IST Report Abuse
christ சினிமாக்கள் பெண்களை ஒரு போதை பொருளாக அசிங்கமாக காட்டபடுவதும் , இளம் வயசு பசங்க மனதில் பாலியல் காட்சிகள் பதிவதும் , பெண்கள் பொது இடங்களில் ஆண்களை கவர்ந்து இழுப்பது போல் ஆடைகளை அணிவதும் இம்மத்ரியான சம்பவங்களுக்கு காரணம் ஆகி விடுகிறது பெண்களும் அவர்களின் பாதுகாப்பு விசயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் .நேரம் கெட்ட நேரத்தில் வெளியில் சுத்தாமல் நேரத்திற்கு வீட்டிற்கு போய் விடுவது அவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Periyabalan - Chennai,இந்தியா
31-டிச-201213:23:08 IST Report Abuse
Periyabalan டில்லி சம்பவம் தனிஒரு மனிதனுக்கு அல்லது மனுஷிக்கு ஏற்பட்ட கொடுமையல்ல. இந்த இந்திய கலாசாரத்துக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கைமணி. அதை நாம் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டதாகத் தெரியவில்லை. வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கும் குற்றவாளிக்கும் முன்விரோதம் இருந்துள்ளதா? இல்லையே. ஆனால் குற்றவாளிக்கும் இந்த கலாசாரத்திற்கும் இடையே ஒரு நீண்ட இடைவெளி இருந்துள்ளது இந்த கொடுமையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்து கலாச்சாரப்படி பெண்தெய்வமான துர்காவுக்கு களிமண்ணால் வடிவைமைக்கபடும் உருவங்களுக்கு முதல்மண் துளி கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்களால் அவர்கள் மனமுவந்து தங்கள் வீட்டு வாசலில் உள்ள காலடி மண்ணில் இருந்து எடுத்துக் கொடுத்தால் மட்டுமே அந்த வருடம் துர்காபூஜைக்கு வேண்டிய அத்தனை சிலைகளையும் செய்யமுடியும். சில வருடங்களுக்கு முன் பாலியல் தொழிலாளிகள் காலடி மண் கொடுக்க சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை சரிசெய்யப்பட்டபின்னரே களிமண் உருவமைக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு தங்கள் சமூகம் கொடுத்த கடமையினைச் செய்ய முடிந்தது. இதுபோன்ற சமூக புரிந்துணர்வு வன்கொடுமைக்காளான பெண் சார்ந்த சமூகப்பிரிவிற்கும் குற்றவாளி சார்ந்த சமூகப் பிரிவுக்கும் இருந்திருந்தததா என்பது கேள்விக்குறியே. இதுபோன்ற சமூகக் குற்றங்களுக்கான தீர்வு சட்டமியற்றுதலால் தீர்த்துவிட முடியாது. அப்படி சட்டவாயிலான தீர்வுகாண இந்த சமூகம் முயன்றால் 30 வருடங்களுக்கு முன்னர் ஷாபானு என்ற ஜீவனாம்சம் கேட்ட பெண்ணுக்கு ஏற்பட்டகதிதான் இந்த சம்பவத்திலும் ஏற்படும். பிரச்சினை தீரவே தீராது. ஆனால் இதுவரை இந்த அரசு எந்திரமும் வன்கொடுமைக்காளான பெண் சார்ந்த சமூகமும் இச்சமூகப் பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்துகொண்டமாதிரித் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
devan arasan - boonlay,சிங்கப்பூர்
31-டிச-201213:21:50 IST Report Abuse
devan arasan நம் நாட்டின் சட்டங்கள் தளருந்து போய்விட்டன அதையே கடுமையாக்கி,மரண தண்டனை வழங்கலாம்.உடனே உடனே சரியான தண்டனை (கொடுரமாக )கொடுத்தால் இந்த மாதிரியான் கொடுமைகள் நிற்க வழி உண்டு .அரசன்
Rate this:
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
31-டிச-201213:10:21 IST Report Abuse
SHivA உணர்ச்சிவசப்பட்டு கோபபடுவது தீர்வாகாது .. இளைஞர்கள் மற்றும் சமுதாயமே சீரழிந்து போவதற்கு நிறைய காரணம் உள்ளது..அதில் சில.. 1.பணமே பிரதானம் அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்கிற மனப்பான்மை..2.பிள்ளைகளை பெறுவது மட்டுமல்லாமல் அவர்களை ஒழுக்கம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் கூட சொல்லிகொடுகாத பெற்றோர்.3.ஒரு சில தவிர பெரும்பாலான சினிமா க்கள் தவறான போதனை ,வரம்பு மீறிய கவர்ச்சி காட்டுவது ,ஒழுக்கமினமையை ரவுடித்தனத்தை பெண்களை கிண்டலா பண்ணுவதை ஹீரோஇசம் என்று காட்டுவது..4.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் மூலம் வரும் கணக்கற்ற வரம்பு மீறிய ஆபாசம் இளைஞர்களுக்கு சுலபமாக கிடைப்பது..(இப்ப நிறைய பெருசுகளும் அதில் வீழ்ந்து கிடப்பது வேறு விஷயம்.)..5.செல்போன் மூலம் வரும் ஆபாச பாட்டு மற்றும் படங்கள் 6.டிவி சீரியல்கள் உறவுகளை கெடுப்பது எப்படி என்று கதை அமைப்பது, உருப்படாத நடனம் மற்றும் லைவ் ஷோ க்கள் 7.பத்திரிகை கள் மற்றும் வெப்சைட் கள் மூலம் கிடைக்கும் ஆபாசங்கள் ..8.இதையெல்லாம் பற்றி கவலை படாமல் இருக்கும் சமுதாயம் ..9.மிக சுலபமாக கிடைக்கும் போதை மற்றும் மது , 10.மிகபெரும் வியாபாரமாகி விட்ட கல்வி (அதில் காசு கொடுத்து கல்வி,அதாவது ஏதோ ஒரு பெருமைக்கு வாங்கும் பட்டம் பந்தை வேண்டுமானால் தரலாம் ஆனால் ஒழுக்கத்தை ,நேர்மையை ,பண்பாட்டை எப்படி தரும்..??? முதலில் நாம் நேர்மையை கற்றுகொள்வோம் பின்னர் ஒவ்வொன்றாக சரியாகும்..
Rate this:
Share this comment
Cancel
Arul - Chennai,இந்தியா
31-டிச-201211:29:19 IST Report Abuse
Arul கலாச்சாரம் முறையாக பாதுகாக்கப்படாமல், புரிந்துணர்வு இல்லாமல் பெண் விடுதலை, பெண் உரிமை,பெண் சுதந்திரம் என்ற பேரில் அறை குறை ஆடை அணிவதிலும், மது மற்றும் புகை பிடிப்பதிலும், தகாத உறவு முறைகளிலும், இரவு பார்ட்டிகளிலும்தான் பெண் சுதந்திரம்,விடுதலை இருப்பதாக கருதி கலாச்சாரம் சீரழிந்து விட்டது தான் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வர காரணம். பெண் உரிமை,பெண் சுதந்திரம், ஆண் ஆதிக்கம், கலாச்சாரம், கலாச்சார சீரழிவு பற்றிய புரிதல் அணைவருக்கும் வேண்டும். தனிமனித ஒழுக்கம் மட்டுமே கலாச்சார சீரழிவை காப்பாற்றும்.
Rate this:
Share this comment
Cancel
kannan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201210:54:02 IST Report Abuse
kannan இன்னும் இரண்டு நாட்கள் இதை பற்றி பேசுவார்கள் பிறகு வேறுஒரு கேஸ் கிடைய்த்தால் அதன் பின்னால் போய்விடுவார்கள் இது தொடர்கதைதானே அது கயவர்களூக்கு தெரியும் நம் நாட்டின் சட்டம் பண்த்தின் பின்னாலே போய்விடும்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201210:22:53 IST Report Abuse
Swaminathan Nath பெண்களும் கொஞ்சம் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும், வெளியில் போகும் பொது நாகரீக உடை களை அணியவேண்டும், இரவு நேரதில் தனியாக வெளியில் செல்ல வேண்டாம்,. school பாடத்தில் - தனி மனிதன் ஒழுக்கம், பெண்ணின் பெருமை போன்ற பாடம் வைக்கவேண்டும், நீதி போதனை வகுப்புகள் நடத்த வேண்டும், தாய்மை சிறப்பு மாணவர்களுக்கு உணரும்படி பாடம் அமயவேண்டும், தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும், அதை உடன் கொடுக்கவேண்டும், .././,
Rate this:
Share this comment
Cancel
siva kumar - chennai,இந்தியா
31-டிச-201200:02:14 IST Report Abuse
siva kumar பெண்களுக்கு தங்களை தாங்களே காத்து கொள்ள கற்று கொடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை