டோக்கியோ: சர்ச்சைக்குரிய தீவு தொடர்பாக சீனாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஜப்பான் பிரதமர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் பாதுகாப்பு உறவை மேம்படுத்தி கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், பாதுகாப்பு தொடர்பான இநந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் இடையே விரிவுபடுத்தினால் இந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை நிலவும் என கூறினார்.