புதுடில்லி:மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பலர் அமைதியான முறையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவர்கள், வளாகத்திலிருந்து, மாணவி தூக்கி வீசப்பட்ட முனிர்கா பஸ் ஸ்டாப் வரை அமைதியாக பேரணி சென்றனர். மேலும் அவர்கள், கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி, புத்தாண்டு பிறக்கும் இரவு அன்று போராட்டம் நடத்துவோம் என கூறினர். இடது சாரி அமைப்புகளும் மண்டி ஹவுஸ் பகுதியிலிருந்து ஜந்தர் மந்தர் பகுதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் அமைதியாக பேரணியாக சென்றனர். ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம்நடத்துபவர்கள் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.