TN Guv, Karuna mourn rape victim's death | கற்பழிப்புக்கு ஆயுள் முழுவதும் தனிமைச்சிறை : கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கற்பழிப்புக்கு ஆயுள் முழுவதும் தனிமைச்சிறை : கருணாநிதி

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
TN Guv, Karuna mourn rape victim's death, கற்பழிப்புக்கு ஆயுள் முழுவதும் தனிமைச்சிறை : கருணாநிதி

சென்னை: டில்லி மாணவி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் தனிமைச்சிறை என்ற ஒரு சட்டத்தை கொண்டு வரலாம் என தி.மு.க,.தலைவர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார். டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் : மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி டில்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி சிங்கப்பூரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கே மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.


ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமன்றி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன்முறைக்கு மாணவிகளும் ஏழைப் பெண்களும் உள்ளாக்கப்படும் செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.


இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதுதான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.


கவர்னர் ரோசைய்யா வெளியிட்டுள்ள செய்தியில் : வீரமுடன் எதிர்த்து போராடி மறைந்த இந்த மாணவியின் மரணம் ஆழ்ந்த அதிர்ச்சியை தந்து பெரும் கவலையை தருகிறது. கற்பழிப்பில் ஈடுபட்ட சம்பவம் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வெளியிட்டுள்ள செய்தியில் குற்றவாளிகளுக்கு கருணை காட்டாமல் தண்டிக்க வேண்டும் இது போன்ற குற்றங்களுக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட கூடாது என்றும் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - trichy,இந்தியா
30-டிச-201203:08:15 IST Report Abuse
sankar தனிமை சிறை சரியான தண்டனை தான் . ஆனால் உங்களை போன்றவர்கள் ஆண்டால், அண்ணாவின் பிறந்த நாள் , அய்யாவின் பிறந்த நாள் (பெரியார்) முத்துவேலர் பிறந்த நாள் , நேரு இந்திரா காமராஜ் , அம்பத்கர் , வள்ளுவர் , இளங்கோவடிகள் , மனைவி , இனைவி,துணைவி , பேரன் ஆதிதான் பிறந்த நாள் . என்று ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒருவரை கழக குண்டர்களை விடுவிப்பதை போல விடிவித்து விடுவீர்கள்
Rate this:
Share this comment
Cancel
vijaybala - woodlands,சிங்கப்பூர்
30-டிச-201201:45:46 IST Report Abuse
vijaybala மனசாட்சியே இல்லாம மக்களை ஏமாற்ற உன்னாலதான் முடியும். திரும்ப திரும்ப. ப்ளீஸ் முடியல, வலிக்குது விட்டுடு. அப்பாடா தமிழ், தமிழன்னு சொல்லலை.
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
29-டிச-201219:17:31 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் தனிமை சிறை போதுமா.. .. பெரிய பெரிய கிரைம் பிளான் ஜெயிலில் இருந்து தான் ஆரம்பமாகிறது..செல்போன், கஞ்சா,அபின் உல்லாசம் , லேப்டாப் என சகல வசதியுடன் , அசைவ உணவு வகைகளுடன் வாழ்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . அந்த லக்ஷணத்தில் இருக்கிறது நம் சிறைசாலைகள்... அரபு நாடுகளில் உள்ளது போல் "கட்" செய்யலாம்.. இது மிக கொடுரம் என்றால் தூக்கு பெஸ்ட்... ... தூக்கு தண்டனை பெறபோகும் கைதிடம் மரண வாக்கு மூலத்தையும் , அவன் மரண பயத்தையும் மீடியாக்களில் ஒளி பரப்பினால் எவனக்கும் குற்றம் செய்யும் எண்ணம் வராது...
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
29-டிச-201219:15:36 IST Report Abuse
KMP இல்லை, அய்யா கண்டிப்பாக தூக்கு அவசியம் (இந்த 6 பேருக்கும்)
Rate this:
Share this comment
Cancel
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
29-டிச-201219:01:07 IST Report Abuse
திருமகள்கேள்வன் தலைவா... அவ்வாறு தனிமை சிறையில் அடைத்து ஆயுள் முழுவதும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் தண்ட செலவுசெய்து பாதுக்காக்க வேண்டும் என்று என்ன அவசியம்.. அடுத்த பத்து பனிரெண்டு ஆண்டுகளில் மக்கள் இதனை மறந்து விட்டவுடன்... மனித உரிமை கழகங்கள் ஆயுள் தண்டனை கைதிகளாக இவர்களை கருதி விடுவிக்க வேண்டும் என்று போராடும்... எதற்கு இந்த தொல்லைகள்... நீங்கள் மனிதாபிமாநிதான்... பகைவருக்கு இறங்கும் நல்நெஞ்சம் கொண்டவர்தான்... இலங்கை பிரச்சனையிலேய நாங்கள் கண்டோம்... உங்கள் திருவாயை தயவுசெய்து இந்த விஷயத்தில் மட்டுமாவது மூடிக்கொள்ளவும்... தண்ணீர் மின்சாரம் ஆகிய பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தி தமிழருக்கு நன்மை செய்யவும்... ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுங்கள் தலைவா... போதும் உங்கள் பணிகள்.
Rate this:
Share this comment
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
29-டிச-201218:55:09 IST Report Abuse
Sri Gugan முதலில் இரங்கல்செய்தி சொல்வதால் மட்டும் நடந்த சம்பவத்திற்கு மத்திய அரசும் அதற்கு ஆதரவு அளிப்பவர்களும் பொறுப்பாளிகள் இல்லை என்று ஆகாது.
Rate this:
Share this comment
Cancel
Sornam Alagarsamy - Chennai,இந்தியா
29-டிச-201218:43:10 IST Report Abuse
Sornam Alagarsamy Mr Karunanidhis suggestion to keep the rapists in solitary jail is highly deplorable. that shows his low moral standard in life. such criminlas should be hanged in public like soudi Arabia.Then only society will have peace of mind. it isa shame on part of Ex CM of Tamilnadu to tell to keeep safethe barbaric rapists in jail till they die. we must hang them without any delay.People like Karunanidhi will never understand this. S.A.Alagarsamy 72 years old senior citizen
Rate this:
Share this comment
Cancel
Abdul Jabbar - dammam,சவுதி அரேபியா
29-டிச-201218:25:01 IST Report Abuse
Abdul Jabbar அய்யா, அவன் குற்றவாளி என்று தெரிந்த பிறகும், அதுவும் அவன் ஒரு கொலையாளி என்பதாலும் பதிலுக்கு அவனுக்கு தண்டனையாக மரண தண்டனையே சரியான தீர்வாக அமையுமே தவிர சாகும் வரை ஜெயிலுக்குள்ளே சோறு ஊட்டி விடுவதற்கு அல்ல. கடைசியாக இன்றைய இந்தியாவுக்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டமே சரியான தீர்வு கொடுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Chozhan - villupuram,இந்தியா
29-டிச-201217:43:26 IST Report Abuse
Chozhan யோக்கியன் வரான் சொம்ப எடுத்து வீட்டுலே வையுங்க
Rate this:
Share this comment
Cancel
hindustani - beijing,சீனா
29-டிச-201217:25:34 IST Report Abuse
hindustani please shut up your mouth, don't make politics, we are looking for freedom from your current alliance..jai hind.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை