திருவண்ணாமலை: முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் கா. வாழவெட்டி பகுதியில் குடியிருப்பவர் திருமுகம். முன்னாள் ராணுவ வீரரான அவருக்கும், தனது வீட்டில் குடியிருக்கும் இளங்கோ என்பவருக்கும் வீடு கட்டுவதில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திருமுகம், தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் இளங்கோ பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.