நாகப்பட்டினம்: மீன்வளத்துறை விதித்துள்ள கட்டுப்பாட்டையடுத்து, நாகை தாலுகாவைச் சேர்ந்த, எட்டு கிராம விசைப்படகு மீனவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுனாமிக்கு பின் கடல்வளம் குறைந்துள்ளதால், விசைப்படகுகள் மீன்கள் கிடைக்கும் இடங்களை தேடி, தொழில் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், "இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை பகுதியில் தொழில் செய்யக் கூடாது' என, மீன் வளத்துறையினர் மீனவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். விசைப்படகில் சென்று, மீன்பிடிப்பதில் உள்ள தொழில் பிரச்னைகளுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் உரிய வழி காண வேண்டும். இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து, ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க நிரந்தர முடிவை எடுக்க வலியுறுத்தி, நாகை தாலுகாவைச் சேர்ந்த, எட்டு கிராமத்திலுள்ள, 600 விசைப்படகு மீனவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.