Advertisement
ஜி.எஸ்.டி., சாலையில் மழைநீர் போக்குவரத்து கடும் பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,22:13 IST

குரோம்பேட்டை : ஜி.எஸ்.டி., சாலையில், நான்கு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.லேசான மழை பெய்தாலே போதும், குரோம்பேட்டை காவல் நிலையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், மழைநீர் தேங்கிவிடும். அதுபோன்ற நேரங்களில், போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும்.
மேலும், காவல் நிலையத்திலும், மழைநீர் புகுந்து விடும். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு, அங்கு, மழைநீர் வடிய, நெடுஞ்சாலை துறையும், நகராட்சி நிர்வாகமும், தகுந்த நடவடிக்கை எடுக்காததே காரணம்.
இந்நிலையில், நேற்று பெய்த மழைக்கு, அங்கு, வழக்கம் போல், நான்கு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்லாவரம் மார்க்கமான சாலையில், சானடோரியத்தில் இருந்து, வாகனங்கள் அணிவகுந்து நின்றன. வாகனங்கள், ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. அப்பகுதியை கடந்து செல்ல முயன்ற இருசக்கர வாகனங்கள், பழுதாகி நின்றன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
30-டிச-201210:10:54 IST Report Abuse
மதுரை விருமாண்டி என்ன, இருவது கோடி அடிச்சு, ஒரு பைப்பை போட்டு அங்கே இருந்து வடிய விட்டு பக்கத்து காலனி எதிலாவது விட்டு விடுவார்கள்.. அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு அவங்க தொல்லை... அப்புறம் இன்னொரு இருவது கோடி... அப்படியே நார அடித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.