சென்னை : போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த, போதை வாலிபரை, போலீசார் கைது செய்தனர். திருநின்றவூர்
நத்தம்பேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 32. தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம், நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, ஆவடி சாலையில்
வந்துள்ளார்.
அப்போது, அண்ணா துரை சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட
சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், இடைமறித்து, சோதனையிட்டுள்ளார். அவருடன், யுவராஜ்
வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார். ராஜனை
கீழே தள்ளிவிட்டு, வாகனத்துடன் பறந்துவிட்டார். அவரை மடக்கிப்பிடித்த
போது, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ஆவடி போலீசார், யுவராஜ் மீது, கொலை
மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் செய்தல், ஆபாச பேச்சு உள்ளிட்ட
பிரிவுகளில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.