கவுகாத்தி: அசாம் முதல்வர், தருண் கோகோய் வீட்டு அருகே, நேற்று குண்டு வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.அசாம் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, தருண் கோகோயின் வீடு, கவுகாத்தியில் உள்ளது. நேற்று, இந்த வீட்டின் அருகே, பலத்த சத்தத்துடன், குண்டு வெடித்தது. இதில், சஞ்சீப் தாஸ் என்ற சிறுவன், படுகாயமடைந்தான்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:கல் குவாரியில் பயன்படுத்தப்படும், டெட்டனேட்டர் குண்டுகளை, ஒயர்கள் பொருத்தப்பட்ட நிலையில், இந்த சிறுவன், சைக்கிகளில் கொண்டு சென்றுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்துள்ளது.சிறுவனுக்கு, மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதியில், இந்த மாணவன், குண்டுகளை எடுத்துச் சென்றது எப்படி என்பது பற்றி, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.