புதுடில்லி: மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவ, முக்கிய குற்றவாளியை, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், மாலேகானில், 2008ல், குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், 35 பேர் இறந்தனர். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், சம்ஜவுதா ரயிலில் நடந்த, குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, ராஜேஸ் சவுத்ரியிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.இதில், மாலேகான் குண்டு வெடிப்பில், தனக்கு தொடர்புள்ளதாக ஒப்புக் கொண்டதுடன், மேலும் சில விவரங்களையும், சவுத்ரி, தெரிவித்தான். இதன் அடிப்படையில், மோகன் என்ற நபரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், கைது செய்துள்ளனர்.மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில், என்.ஐ.ஏ., கைது செய்துள்ள, முதல் நபர் மோகன். விசாரணைக்காக மோகன், ம.பி.,யிலிருந்து, மும்பைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.