மூணாறு: கொலை வழக்கை நடத்துவதற்கு பணம் தேவைப்பட்டதால், நண்பனின் மனைவியை கழுத்து அறுத்து கொன்று, நகைகளை திருடிய வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தொடுபுழா கோர்ட் உத்தரவிட்டது. மூணாறு அருகே மாங்குளம் 50 ம் மைல் பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத், 25. கடந்த 2006 டிச., 16 ல்,சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில், பினோ என்பவரை, கத்தியால் குத்தி கொலை செய்தார். ஜாமினில் வந்த ரஷீத்துக்கு, வழக்கை நடத்த பணம் தேவைப்பட்டது. தனது நண்பரான சுரேஷின் மனைவி ஜிலுவிடம், 32, பணம் கேட்டார். ஜிலு, தர மறுத்துவிட்டார். மலை வாழ் மக்கள் வசிக்கும் கள்ளகுடி அங்கன்வாடியில் உதவியாளராக இருந்த ஜிலு, 2009 ஜூலை 6 ல், பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். இவரை பின் தொடர்ந்த ரஷீத், ஜிலுவை கழுத்து அறுத்து கொலை செய்து, நகைகளை எடுத்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து தெரியாதது போன்று, ஜிலுவின் கணவர் சுரேஷ்க்கு ஆறுதல் கூறினார். அப்பகுதியினரின் தகவல்படி, ரஷீத்தை, மூணாறு போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த ஜிலுவின் நகைகளை ஆய்வு செய்தபோது, "போலி' என, தெரிந்தது. இவ்வழக்கு, தொடுபுழா கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அரவிந்த்பாபு, ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். முதல் கொலை வழக்கில், ரஷீத்துக்கு öஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மேலும் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.