நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தங்க ஆபரணங்களை, பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகள், அலட்சிய போக்குடன் நடப்பதால், நகை பாதுகாப்பு பலவீனம் அடைந்து உள்ளதாக, பக்தர்கள் இடையே சந்தேகம் எழுந்து உள்ளது.வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் காணிக்கையாக வழங்கிய தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் அவரது ஆட்சி காலத்திற்கு பின், தற்போது வரை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள் கோவில் பொக்கிஷ அறையில் வைக்கப் பட்டு உள்ளன.இவை, மூலவருக்கு அணிவிக்கப் பட்டு பின்னர் நிர்வாக அதிகாரிகள் அந்தஸ்து உள்ள ஊழியர்கள், பத்திரப்படுத்தி வைப்பர். "பேஸ்கார்' எனப்படும் அந்த பொறுப்பில் இருந்த இருவர், பதவி உயர்வு பெற்று, வேறு துறைக்கு சென்று விட்டனர்.இந்த ஆபரணங்களை மேற்பார்வையிட்டு பராமரிக்கும் பொறுப்பை, தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள் அலட்சியத்துடன் தட்டி கழித்து வருகின்றனர். இதற்கு காரணம், தேவஸ்தான உயர் அதிகாரிகளின் மெத்தன போக்கு என, கூறப்படுகிறது.இதனால், பக்தர்கள் பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கிய தங்க ஆபரணங்களுக்கு, பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. சில தங்க ஆபரணங்கள், மாயமாகி விட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, பக்தர்கள் மத்தியில் நகைகள் பாதுகாப்பு குறித்து, சந்தேகம் எழுந்து உள்ளது.
****
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.