ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து விவாதிக்க, டில்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி அடைந்ததை அடுத்து, தெலுங்கானா ஆதரவாளர்கள், நேற்று ஆந்திராவில், "பந்த்' நடத்தினர்; இதையொட்டி, மாநிலத்தின் பல பகுதிகளில், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் எனக்கோரி, அம்மாநிலத்தில், கடந்த பல மாதங்களாக, தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, டில்லியில் நேற்று முன் தினம், அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில், ஆந்திர மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். இருந்தாலும், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்குப் பதிலாக, "தெலுங்கான தனி மாநில கோரிக்கை குறித்து, ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.அமைச்சரின் இந்த அறிவிப்பு, தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை ஆதரிக்கும், சந்திர சேகர ராவின், தெலுங்கான ராஷ்டிரிய சமிதி மற்றும் பா.ஜ., போன்ற கட்சிகளுக்கும், தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.அதனால், மத்திய அரசின் காலம் தாழ்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று இந்த அமைப்புகள், "பந்த்' திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து, ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன; அரசு பஸ்கள் ஓடவில்லை. கல்வி நிறுவனங்களும், பல்கலை கழகங்களும் மூடப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், "பந்த்' அமைதியாகவே நடைபெற்றது.பல இடங்களில், தெலுங்கானா ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.