சபரிமலை: மகர ஜோதி உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை திறக்கப்படுகிறது. ஜனவரி, 14ம் தேதி மகர ஜோதி உற்சவம் நடைபெறும்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், இம்மாதம், 26ம் தேதி மண்டல பூஜை முடிந்து, நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து, மகர ஜோதி உற்சவத்திற்காக, கோவில் நடை, இன்று மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. தலைமை அர்ச்சகர், கண்டரரு ராஜீவரு, நடையை திறக்கிறார். இன்று பூஜைகள் ஏதுமிருக்காது.நாளை காலை, கணபதி ஹோமத்துடன், வழக்கமான பூஜைகள் துவங்கும். ஜனவரி, 14ம் தேதி மகர ஜோதி உற்சவம் நடைபெறும். தொடர்ந்து, 20ம் தேதி வரை, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்று, பந்தள மன்னர் குடும்பத்து பிரதிநிதி, சாமி தரிசனம் செய்த பின், வழக்கமான நடை முறைகள் முடிந்து, நடை அடைக்கப்படும்.மகர ஜோதி உற்சவத்தின் போது, சபரிமலை வரும் பக்தர்கள், சிறந்த முறையில் தரிசனம் செய்யவும், தங்கவும் விரிவான ஏற்பாடுகளை, திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக, பிற மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.