ஜெய்ப்பூர்: "தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை, சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும் இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ., - எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார்.கடிதம்ராஜஸ்தான், அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வான, பா.ஜ.,வைச் சேர்ந்த, பன்வாரி லால் சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:பெரும்பாலான, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக உள்ளன. "மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வருவது, பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கும், கேலி, கிண்டல்களுக்கும், வழி வகுத்து, ஆபத்தை ஏற்படுத்தி விடும்.பள்ளிகளுக்கு நடந்து செல்லும்போதும், பஸ் ஏறுவதற்காக, பஸ் ஸ்டாப்புகளில், காத்திருக்கும்போதும், குட்டைப் பாவாடை அணிந்துள்ள மாணவியர், பலரின், கேலி, கிண்டல்களுக்கு ஆளாகின்றனர்.ஜெய்ப்பூரை பொறுத்தவரை, பெரும்பாலான பள்ளிகளின், சீருடை, குட்டைப் பாவாடையாகத் தான் உள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும், தற்போதைய சூழலில், இந்த உடை, சற்றும் பொருத்தமற்றது. குட்டைப் பாவாடைக்கு பதிலாக, வேறு நல்ல உடையை பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில், பன்வாரி லால் சிங், வலியுறுத்தியுள்ளார்.அடுத்த சர்ச்சைஇதற்கிடையே, ஐதராபாத் போலீஸ் கமிஷனர், அனுராக் சர்மா விடுத்துள்ள அறிக்கை, பெண்கள் நல அமைப்புகளிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அனுராக் சர்மாவின் அறிக்கை:இந்தாண்டு, ஐதராபாத்தில் மட்டும், 68 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 64 வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, குற்றவாளிகளைப் பற்றி, நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பது தான், அதிர்ச்சிகரமான விஷயம்.இவ்வாறு அந்த அறிக்கையில், அனுராக் சர்மா கூறியுள்ளார்.அவரின் இந்த அறிக்கைக்கு, பெண்கள் நல அமைப்புகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசிய பெண்கள் கூட்டமைப்பு, பொதுச் செயலர், ஆனி ராஜா கூறியதாவது:தன் அறிக்கை மூலமாக, கமிஷனர் என்ன கூறுகிறார் என்றே தெரியவில்லை. உங்களைப் பற்றி, எனக்கு தெரிந்திருக்கிறது என, வைத்துக் கொள்வோம். அதற்காக, என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு, உங்களுக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டு விட்டதாக அர்த்தமா?பொறுப்பான, போலீஸ் கமிஷனர் பதவியில் உள்ள ஒருவர், இதுபோன்ற, பொறுப்பற்ற அறிக்கைகளை விடக் கூடாது. இதுபோன்ற அறிக்கைகள் மூலம், கற்பழிப்பு சம்பவங்களை, நியாயப்படுத்தக் கூடாது.இவ்வாறு ஆனி ராஜா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர் சொல்வது சரிதான். சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் எனது மகள் படித்து வந்தாள். இதே பள்ளியில் பல பிரபலங்கள் படித்தவர்கள். சிறு வயது பெண்ணாக இருக்கும் வரை பெற்றோரை இருக்கும் எங்களுக்கு அவள் அணிந்த சீருடை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. வயது வந்ததும், மெட்ரிக் வரை 'Sports Class ' - ஸுக்கு ஒரு நாள் மட்டும் குட்டை பாவாடை அணிந்து வரச்சொல்வார்கள். அந்தப்பெண்ணை விட பெற்றோராகிய எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கும். அதே உடையுடன் பேருந்தில் ஏறியோ, பள்ளி வேனிலோ செல்லும்போது, அப்பெண்ணை விட எங்களுக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். வக்கிரம் மிகுந்தவர்கள் சமூகத்தில் பலர் இருக்கும்போது, இதுபோன்ற விசயங்களில் தங்களை முற்போக்காளர்கள் என பலரும் காட்டிக்கொள்வது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.
கமிஷனர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? நன்கு பழக்கப்பட்டவர்களாலேயே தங்களது கற்பு பறிபோகுது என்றால் அப்பெண் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத்தானே கூறுகிறார்? ஆன்னா, ஊன்னா இந்த மாதர் சங்கங்கள் இதுபோன்று பேசுவதற்கு பதில் இதுபோன்ற குற்றங்களை தடுக்க என்ன செய்யலாம் என்பதை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கலாமே?
நானும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன். என் குழந்தைகளும் KG கான்வென்டில் தான் படிக்கின்றனர். குட்டை பாவாடை சீருடை பற்றி பள்ளி நிர்வாகத்திடம் வாதிட தான் போகின்றேன். இல்லை என்றால் பொது நல வழக்கு தொடர போகின்றேன். பெற்றோகலான உங்களின் ஆதரவு எனக்கு தேவை. தயவு செய்து உங்கள் ஆதரவை லைக் இல் தெரியபடுத்தவும். நன்றி - சக்திவேல்
நமதூர் அரசியல்வாதிகளின் தகுதி அவர்களின் கருத்துக்களின் மூலம் வெளிபடுகிறது ஒருவர் மது கடைகளை மூடவேண்டும் என்கிறார் மற்றும் ஒருவர், பெண்கள் இரவில் வெளியிலே இருக்க வேண்டாம் என்கிறார் ,மற்றும் ஒருவர் குட்டபாவாடையை குறை சொல்கிறார் ??? அருமையிலும் அருமையான கருதுக்கள் ,உண்மையில் இவர்களின் தகுதிகள் இதன் மூலம் வெளிபடுகிறது என்ன இவர்களின் தொலை நோக்கு சிந்தனை இப்படிப்பட்ட முட்டாள்கள் கொஞ்சம் வாயை முடிகொண்டு இருந்தாலே புண்பட்ட மனதிற்கு ஆறுதலை தரும் .. அய்யா பெரியவர்களே உங்கள் வீட்டு பெண்கள் பாதுகாப்போடு எங்கே வேண்டுமானாலும் எப்போவேண்டுமானாலும் போகலாம் என்னசெய்வது உங்களை தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு உங்கள் பின்னால் வரும் தொண்டர்கள் முதலில் இவர்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் §கடவுள்தான் காப்பாற்றவேண்டும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.