நகரி: திருப்பதியில் மூன்று நாட்கள் நடந்த, உலக தெலுங்கு மாநாட்டில், நிறைவு நாள் நிகழ்ச்சியில், தமிழக கவர்னர், ஆந்திர முதல்வர் ஆகியோர் பங்கேற்றனர்.திருப்பதியில், கடந்த, 27ம் தேதி உலக தெலுங்கு மாநாடு துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த மாநாடு, நேற்று நிறைவு பெற்றது. மாநாட்டில் கலந்து கொள்ள ஆந்திர அரசின் சார்பில், தனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என, அதிருப்தி தெரிவித்த, தமிழக கவர்னர் ரோசய்யா, நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய அமைச்சர்கள் சிரஞ்சீவி, பள்ளம் ராஜூ மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட, பலர் கலந்து கொண்டனர். இம் மாநாட்டுக்கு, துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.