புதுடில்லி: ""மாரடைப்பு ஏற்பட்டதால், மூளையில் வீக்கம் ஏற்பட்டு, நீர் சுரந்ததன் காரணமாகவே, மருத்துவ மாணவி உயிரிழந்துள்ளார்,'' என, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறினார்.டில்லி மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனை டாக்டர், யதின் மேத்தா கூறியதாவது:படு காயங்களுடன், நினைவிழந்த நிலையில், சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவிக்கு, 25ம் தேதி இரவு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவரின் மூளைக்கு செல்லும், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது; மூளை வீக்கமடைந்தது.இதையடுத்து, அவரின் உடலின் ஒவ்வொரு பாகமும், செயல் இழக்க துவங்கியது. சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து, சிங்கப்பூருக்கு, விமானத்தில் கொண்டு செல்வதற்காக, ஆம்புலன்சில், மாணவியை ஏற்றியபோது, நானும் உடன் இருந்தேன்.அப்போது, மாணவியின், ரத்த அழுத்தம், இருதய துடிப்பு ஆகியவை, இயல்பு நிலையில் தான் இருந்தன. ஏற்கனவே, அவருக்கு, குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதில் தொற்றுகளும் இருந்தன. இதுபோன்ற சூழலில், மரணம் ஏற்படுவது, தவிர்க்க முடியாதது.ஆனாலும், அந்த மாணவி, உயிர் பிழைப்பதற்காக, கடுமையாக போராடினார். அவரைப் போன்ற மன உறுதிமிக்க பெண்ணை, நான் பார்த்தது இல்லை. டில்லியிலிருந்து, சிங்கப்பூருக்கு, ஆறு மணி நேரம் விமானத்தில் பயணம் செய்ததால், அவரது ரத்த அழுத்தம், வெகுவாக குறைந்து விட்டது.ஆனாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே, ரத்த அழுத்தம், கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சிகிச்சைக்கு, அவரது உடல் நிலை, மிகவும் ஒத்துழைத்தது, ஆச்சர்யமான விஷயம்.சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், அவரது உடல் நிலை, மேலும் மோசமடைந்தது. மூளையில் ஏற்பட்ட வீக்கத்தால், நீர் சுரக்க துவங்கியதால், மரணமடைந்துள்ளார். தரமான சிகிச்சை அளிப்பதற்காக, அவரை சிங்கப்பூர் கொண்டு செல்ல நேரிட்டது. இவ்வாறு, யதின் மேத்தா கூறினார்.
சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்உயிரிழந்த மருத்துவ மாணவியின் சொந்த கிராமம், சோகத்தில் மூழ்கியது.கற்பழிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவயின் சொந்த ஊர், உ.பி., மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள, மந்த்வாரா கலான் கிராமம். மாணவி உயிரிழந்த தகவல் அறிந்ததும், கிராம மக்கள் அனைவரும், சோகத்தில் மூழ்கினர்.பெரும்பாலான மக்கள், வேலைகளுக்கு செல்லாமல், கிராமத்திலேயே முடங்கினர். கிராம தலைவர், சிவ் மந்திர் சிங் தலைமையில், இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மாணவியின் ஆத்மா சாந்தியடைவதற்காக, பிரார்த்தனை செய்தனர்.சிவ் மந்திர் சிங் கூறுகையில்,"" கற்பழிப்பு சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, மற்ற குற்றவாளிகளுக்கு, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.