ஐதராபாத்: நக்சல் பாதிப்பு மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில், போலீசில் சரணடையும் நக்சல்களுக்கு, 10 லட்ச ரூபாய் முதல், 25 லட்ச ரூபாய் வரை, சன்மானமாகவழங்கப்படுகிறது.நாட்டின் உள்நாட்டு தீவிரவாதத்தில், நக்சல் தீவிரவாதம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் என, 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், நக்சல் தீவிரவாதம் அதிகமாக காணப்படுகிறது.ஆந்திராவில், மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை, நக்சல் தீவிரவாதம் தலைவிரித்தாடிய போது, அவர்களை தேசிய வழிக்கு கொண்டு வர, சன்மானங்கள் அறிவிக்கப்பட்டன. ஆயுதங்களுடன் சரணடையும் நக்சல்களுக்கு, அவர்கள் வகித்த பொறுப்பிற்கு ஏற்ப, சன்மானம் வழங்கப்பட்டது.குறிப்பாக, மாநில அளவில் முக்கிய பொறுப்பில் இருந்தநக்சல், தன் ஆயுதங்களுடன், போலீசில் சரணடைந்தால், அதிகபட்சம், 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.மாநில அளவில் முன்னணி தலைவராக இருப்பவர், போலீசில் சரணடைந்தால், 25 லட்ச ரூபாயும், ஆயுதங்களை ஒப்படைத்தால், கூடுதலாக, 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என, மாநில உள்துறை அறிவித்து உள்ளது.மாவட்ட அளவிலான, நக்சல் தலைவர் சரணடைந்தால், அதிகபட்சம், 15 லட்சம் வரையிலும், கிராமப்பகுதி தலைவருக்கு,அதிகபட்சம், 10 லட்ச ரூபாய் வரையிலும், சன்மானம் வழங்கப்படுகிறது.கை நிறைய பணம் கிடைப்பதால், ஏராளமான நக்சல்கள், தங்கள், "பழைய சித்தாந்தம், பசியை ஆற்றாது' என, நினைத்து, அரசு வழங்கும் சன்மானத்தை பெற்று, லட்சாதிபதிகளாக வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.அ@த @நரத்தில், @பாலீŒõருடன் நடக்கும் Œண்டையில், நக்Œலைட்டுகள் கொல்லப்பட்டால், அதற்கான தொகை Œம்பந்தப்பட்ட @பாலீŒõருக்கும், நக்Œலைட் பற்றிய தகவல் கொடுத்தவருக்கும், பிரித்து வழங்கப்படும்.கடந்த, 2010ம் ஆண்டில், 140 நக்சல்கள் சரணடைந்த நிலையில், 2011ல், 400 பேர் சரணடைந்துஉள்ளனர்.இந்த ஆண்டின் இறுதிக்குள், சரண், 500ஐ தாண்டும் எனவும், இன்னும் 400 பேர் அந்த தீவிரவாத பிரிவில் உள்ளனர் எனவும், புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
படித்து நல்ல உடல் ஆரோகியத்துடன் இருக்கும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தின் வாயிலில் நிற்கின்றனர், மதிய அரசு மாநில அரசு நடத்தும் வேலைக்கு ஆயிரம் ஆயிரமாகப் பணத்தைக் கட்டிவிட்டு அங்கும் வரிசையில் நிற்கின்றனர், அனால் இங்கே பாருங்கள், அரசுக்கு எதிராக செயல்படுவோருக்கு அதுவும் மக்களுக்கு நல்லது செய்ய புறப்பட்டதாகக் கூறி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து செயல்படும் வீரர்களுக்கு வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு ஒருவருக்கு இருபத்தி ஐந்து லட்சம் இனாம்? இப்படி செய்தால் வருங்கால இளைஞர்கள் எங்கு செல்வார்கள் ? வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.