டிச. 22: "கற்பழிப்பு போன்ற, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மக்கள் பிரதிநிதிகளாக பதவி வகிப்பதற்கான தகுதி உள்ளதா என்பது குறித்து பரிசீலித்து, கருத்தை தெரிவிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனை, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
டிச. 23: "எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது போல, பிற்படுத்தப்பட்டோருக்கும் கொண்டு வர வேண்டும்; அவ்வாறு மசோதா கொண்டு வரப்பட்டால், அதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்' என, அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறினார்.
டிச. 24: டில்லியில், மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான மூன்று பேர் குழு, தனது விசாரணையை துவக்கியது.
டிச. 26: "கடந்த நிதியாண்டில் நடந்த, 100க்கும் மேற்பட்ட சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றங்கள் குறித்து வெளிநாடுகளில் இருந்து, அறிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து,விசாரித்து வருகிறோம்' என, மத்திய நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.