புதுடில்லி: மருத்துவ மாணவி மரணத்தை அடுத்து, அவரை கற்பழித்த ஆறு பேருக்கு எதிராக, டில்லி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக, டில்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மாணவி, மரணம் அடைந்த, தகவல் கிடைத்ததும், அவரை கற்பழித்த ஆறு பேருக்கு எதிரான வழக்கை, கொலை வழக்காக மாற்றியுள்ளோம்.ஏற்கனவே, ஆறு பேர் மீது கொலை முயற்சி, ஆதாரங்களை அழித்தல், ஆட்கடத்தல், கும்பலாக கற்பழித்தல் உட்பட, இந்திய தண்டனை சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.ஆறு பேருக்கும் எதிராக, அடுத்த வாரத்தில், கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். கைதான ஆறு பேரில் ஒருவன், தான் மைனர் எனக் கூறியுள்ளதால், அவனின் எலும்புகளை பரிசோதித்து, வயதை உறுதி செய்ய, கோர்ட்டின் அனுமதியை போலீசார் நாடியுள்ளனர்.இவ்வாறு, போலீஸ் அதிகாரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.