Advertisement
கட்டுக்களை அகற்றிய பாகனைதந்தங்களால் குத்தி கொன்றது யானை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,23:01 IST

திருவனந்தபுரம்: கோவில் உற்சவத்திற்காக அழைத்துச் செல்ல முற்பட்ட போது, பாகனை தந்தங்களால் குத்திக் கொன்றது யானை. அத்துடன், பிணத்தை யாரும் நெருங்க முடியாமல், பல மணி நேரம் காவல் நின்றது.கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள கிருஷ்ணசுவாமி கோவிலில், "வல்லபன்' என்ற யானை உள்ளது. இந்த யானையை, பல்வேறு கோவில்களில் நடக்கும் உற்சவங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம், கிருஷ்ணசுவாமி கோவில் அருகே உள்ள, கமலேசுவரம் கோவில் உற்சவத்திற்கு, வல்லபன் யானையை அழைத்துச் செல்லவும், அங்கு உற்சவரின், வீதி உலாவிற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, யானையை குளிப்பாட்டி, உணவு அளித்தார் பாகன் விஜயகுமார் .மதிய நேரத்தில், கமலேசுவரம் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக, யானையின் கட்டுக்களை அகற்றினார். அப்போது யானை திடீரென, பாகனை தந்தங்களால் குத்தியது. அதிர்ச்சி அடைந்த அவர், யானையிடமிருந்து தப்ப மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கீழே விழுந்த பாகனை, பல முறை தந்தங்களால் மீண்டும் மீண்டும் குத்திக் கொன்றது யானை.அத்துடன் பாகனின் பிணத்தை யாரும் நெருங்க விடாமல், நீண்ட நேரம் காவல் நின்றது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், வனத்துறை ஊழியர்களும், தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று, யானையை கட்டிப் போட முயன்றனர்.பல முறை மயக்க ஊசி செலுத்தியும், யானை மயங்காததால், பல பாகன்கள் ஒன்று சேர்ந்து, மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின், யானையை மரத்தில் கட்டிப் போட்டனர். பாகன் விஜயகுமாரின் பிணம், பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இரு தினங்களுக்கு முன், இதே யானை, மற்றொரு பாகனான, சுரேஷ் என்பவரை தாக்கி, காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
ganapathy - khartoum,சூடான்
30-டிச-201218:12:29 IST Report Abuse
ganapathy யானையை கட்டி போடாமல் அது சுதந்திரமாக நடக்கும் அளவுக்கு ஒரு பெரிய ஹால் போன்ற இடத்தில் புல்லு தீனி தண்ணீர் போன்றவை வைத்தால் அது சந்தோசமாக இருக்கும். அதை சிறிதாக வாக்கிங் கூட்டி போக வேண்டும். ஒரே இடத்தில் கட்டி போடா கூடாது. வெளிநாட்டு ஜூவில் பெண்களே யானையை பர்த்துகொல்கின்றனர்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
30-டிச-201209:45:54 IST Report Abuse
p.manimaran அப்படி என்னடா யானையை வலக்குரீன்க. காட்டுல கொனுபோய் விடுங்கடா.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.