Advertisement
தமிழகம் திரும்பினர் நாகை மீனவர்கள்: இலங்கை படையினர் தாக்கியதாக புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,23:13 IST

மண்டபம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்கள், 27 பேர், நேற்று, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்து சேர்ந்தனர். காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியில் இருந்து, டிச., 21ம் தேதி, நான்கு படகுகளில் மீனவர்கள், மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால், கச்சத்தீவு அருகே சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை பிடித்து, திரிகோணமலை கோர்ட்டில் ஒப்படைத்தனர். நீதிபதி உத்தரவுபடி, 26ம் தேதி வரை, தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட அவர்கள், 27ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

மீனவர்களை இலங்கை கடற்படையினர், நேற்று முன்தினம், சர்வதேச கடல் எல்லையில், மண்டபம் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். நேற்று காலை, ராமநாதபுரம் மண்டபம் அழைத்து வரப்பட்ட அவர்கள், விசாரணைக்குப் பின் மீன் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாகப்பட்டினம் மீனவர் சத்யன் கூறியதாவது: இந்திய கடல் எல்லைப் பகுதியில், டிச., 23ம் தேதி, மதியம், 2:30 மணிக்கு மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். எல்லை தாண்டியதாக எங்களை பிடித்த இலங்கை கடற்படையினர், மீனவர் வாஞ்சிநாதனின் இரு கைகளையும் பின்புறம் கட்டி தாக்கினர்; மீன்களை பறித்துக் கொண்டனர்.

இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நாங்கள், "படகுகளில் டீசல் குறைவாக உள்ளது; நேரடியாக நாகப்பட்டினம் செல்கிறோம்' என, கூறியும் விடவில்லை. கடல் கொந்தளிப்பாக இருந்ததால், இரவில் கடும் குளிரில் வாடினோம். எங்களை அப்போதே விடுவித்திருந்தால், 28ம் தேதி இரவு, 8:00 மணிக்குள் நாகப்பட்டினம் சேர்ந்திருப்போம். மண்டபத்திற்கு அழைத்து வந்ததால், படகுகளில் டீசல் தீர்ந்து விட்டது. இவ்வாறு, அவர் கூறினார். மண்டபம் மீன் வளர்ச்சிக் கழகத்தில், படகுகளில் டீசல் நிரப்பிய பின் மீனவர்கள், காரைக்கால், நாகப்பட்டினத்திற்கு சென்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
arivu - Ras al khaimah,இந்தியா
30-டிச-201218:53:00 IST Report Abuse
arivu பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த பிரிவினைவாதிகளும் முன்னாள் விடுதலை புலிகளும் மீனவர்களின் போர்வையில் ஈழத்தை நோக்கி படகில் செல்வதால்தான் இந்த பிரச்னை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
thamizhan - london,யுனைடெட் கிங்டம்
30-டிச-201214:54:42 IST Report Abuse
thamizhan என்ன பாவம் செய்தார்கள் இந்த மீனவர்கள், இந்தியாவில் மீனவனாய் பிறந்ததை தவிர??? வருடத்திற்கு இரண்டு முறை மக்கள் முன் வித்தை காட்டுவதை தவிர வேறெதற்க்கும் உதவாத கப்பர் படையை என்ன வென்று சொல்வது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.