We will speek from street also: Stalin | தெருவில் நின்றும் பேசுவோம்: ஸ்டாலின் ஆவேசம்| Dinamalar

தெருவில் நின்றும் பேசுவோம்: ஸ்டாலின் ஆவேசம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தெருவில் நின்றும் பேசுவோம்: ஸ்டாலின் ஆவேசம்

தூத்துக்குடி: கூட்ட மேடை, பந்தலை பிரித்தாலும் பரவாயில்லை. நாங்கள் தெருவில் நின்றும், அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து பேசுவோம்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடியில், லோக்சபா தொகுதி, தி.மு.க., ஊழியர் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., கூட்டங்களில், அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துக்கூறுகிறோம். அதனால், மாநகராட்சி இடத்தில் கூட்டம் நடத்த ஜெ., தடைவிதித்தார். அதை அதிகாரிகள் செயல்படுத்தினர். "மிசா'வை பார்த்த நாங்கள் எந்த நெருக்கடிக்கும் அஞ்சமாட்டோம். எங்களின், கூட்ட மேடை, பந்தலை பிரித்தாலும் பரவாயில்லை; தெருவில் நின்றும் பேசுவோம். பிரதமர் தலைமையில் நடந்த வளர்ச்சிக்குழு கூட்டத்தில், 10 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பளிக்கப்பட்டதாக, ஜெ., குற்றம்சாட்டினார். தமிழகத்தில், நாங்கள் பேச, நீங்கள் தடைபோடுகிறீர்களே. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். அ.தி.மு.க., அரசின் ஊழல், சர்வாதிகாரம் பற்றி பேசுவோம். லோக்சபா தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு தர உள்ளனர். அத் தேர்தலுடன் சேர்த்து, சட்டசபைக்கும் தேர்தல் வரலாம். மின்வெட்டு குறித்து ஜெ., வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், என்றார். ஜெயதுரை எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், கீதாஜீவன், மாவட்ட செயலர்கள் கருப்பசாமி பாண்டியன், சுரேஷ் ராஜன் பங்கேற்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
boopatheeswaran - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201212:23:21 IST Report Abuse
boopatheeswaran மிகவும் வேதனையான விசயம்... நீங்கள் தெருவில் நின்று பேசுவது அல்ல, உங்கள் குடும்பம் இன்னும் தெருவுக்கு வரவில்லையே அதுதான்..
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில்  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201221:13:51 IST Report Abuse
ஆனந்த் மற்ற நேரம் ஏ சி அறைதானே அப்புறம் என்ன
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
30-டிச-201219:19:55 IST Report Abuse
venkat Iyer பாருங்க சாரு.கூட்டம் கூட போட முடிய வில்லை.தெருவுக்கு வந்தாச்சு.மக்கள்எதிர் கட்சியாக கூட சட்டசபையில் உட்கார வைக்க வில்லை.பண்ம் இருந்து என்ன பண்றது.பொளம்ப விட்டாங்கள்ள.
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
30-டிச-201211:23:12 IST Report Abuse
Baskaran Kasimani "எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்" - சம்பந்தப்பட்டவர்கள் எல்லா வாய்தாவுக்கும் செல்லவேண்டும் என்று சட்டம் வரவேண்டும். வெட்டி வழக்குகள் போடுவதை நிறுத்தி உண்மையான வழக்குகள் போடுவார்கள். நாட்டுக்கும் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-டிச-201207:49:40 IST Report Abuse
Lion Drsekar நீங்கள் தெருவில் நின்று பேசலாம், எங்கள் வீட்டினுள் வந்தும் பேசலாம், எங்கள் வீடு சுவற்றில் கரியால் எழுதலாம், எங்கள் வீட்டை விற்கலாம், தங்கள் மனம் போன போக்கில் நடக்கலாம், ஓடலாம், பேசலாம், அதற்க்கு மாநில அரசும் , மதிய அரசும் பாதுகாப்பு தரும், பதிரிக்கை மற்றும் மீடியாக்களில் செய்தி வெளிவரும், யாரைச் சொல்ல வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
30-டிச-201203:08:05 IST Report Abuse
jagan பேசுங்க தம்பி..... கேக்காமலா போயுடுவங்க.......பணக்காரன் பின்னாடி 10 பேர், பைத்தியக்காரன் பின்னாடி 10 பேர். மொத்ததுல உன் பின்னாடி 20 பேர்.
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
30-டிச-201200:56:04 IST Report Abuse
Jai "மிசா" காலத்தில், காங்கிரஸ் கட்சியை என்னவெல்லாம் தூற்றிநீர்கள், இன்று அவர்கள் காலடியில் தானே இருக்கிறீர்கள். உங்களை எப்படி நம்புவது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.