அ.தி.மு.க., இளைஞர் அணியினருக்கு, மனவள பயிற்சி அளிக்கப்படுகிறது. 56 மாவட்ட, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலர்கள், இதில் பங்கேற்றனர். அறநிலையத் துறை ஊழியர்களுக்கு பயிற்சியளித்த, மதுரை சமூக அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள், அ.தி.மு.க., இளைஞர் அணியினருக்கும் பயிற்சி அளிக்கின்றனர். வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, மூன்று நாட்கள் இந்த பயிற்சி நடக்கிறது. பயிற்சியை கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். இது தவிர, கேள்விக்கு பதில், எழுத்துத் தேர்வு போன்றவையும் நடத்தப்படுகிறது. தேர்வுகள் அனைத்தும், மனவளத்தை அறியவும், மேம்படுத்தவும், தெளிவுபடுத்தவும் நடக்கிறது. தன்னை பற்றி கூடுதலான எண்ணத்தை வைத்திருப்பது, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை போக்கும் வகையில், பயிற்சிகள் அமைந்துள்ளன. பயிற்சி குறித்து, இளைஞர் அணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எதையும் மிகைப்படுத்தாமல், மறைக்காமல் எதார்த்தமாக பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என, முன்கூட்டியே தெரிவித்தனர். கட்சி தலைமை சொன்னதால் பயிற்சிக்கு வந்துள்ளோம் என, இருக்க கூடாது. பயிற்சியில் முழுமையாக பங்கெடுக்க வேண்டும் என, முதல் நாளன்றே ஆசிரியர்கள் கூறினர். அதன்படி, இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளோம். இந்த பயிற்சி, எங்களுக்கு தன்னம்பிக்கையை கூட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.