அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத்தின், இறுதி தீர்ப்பு, 2007ல் வெளிவந்த பின், நான்கு ஆண்டுகளுக்கு மேல், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, 2011 வரை, இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, ஒரு துரும்பை கூட கிள்ளி போடாதவர் கருணாநிதி. தற்போது, "கர்நாடகம் தடுக்கும் தண்ணீரும்; தமிழகம் வடிக்கும் கண்ணீரும்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் போது, "உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்' என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியான போது, இது தமிழகத்திற்கு, பாதகமானது என்று, நான் அறிக்கை வெளியிட்டு, அந்த இறுதி தீர்ப்பை தான் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று, பிரதமருக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, 2007 பிப்., 5ல் வெளிவந்த பின், 19ல் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், காவிரி நடுவர் மன்றத்தில், தமிழகத்திற்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கி, சாதகமான தீர்ப்பை பெற, சில ஆண்டுகளாகும்.
இந்த காலத்தில், மாநிலத்தின் நலன் கருதி, நதிநீர் பங்கீடு தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளி யிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை, எவ்வித காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்த, அ.தி.மு.க., வலியுறுத்தியது. மேலும், 2007 ஏப்ரலில் நடந்த,
புரியாத புதிர்:
இறுதி தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிட்டு விட்டால்,
மாபெரும் தொண்டு:
எது எப்படியோ, உபகாரம் செய்கிறேன் என்று சொல்லி உபத்திரவம் அளிக்க வேண்டாம் என்று, கருணாநிதியை, தமிழக மக்கள் சார்பில், வலியுறுத்துகிறேன். இந்த விஷயத்தில், அவர் வாய் திறக்காமல் இருந்தாலே, அது தமிழக மக்களுக்கு செய்யும், மாபெரும் தொண்டாக இருக்கும்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட் முன், அளித்த வாக்குறுதியின்படி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, உடனே மத்திய அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்றைய மாண்புமிகு தமிழக முதல்வரை போல தனியா யாருக்கும் துணிச்சல் வராது....பெண் சிங்கம் பெண் சிங்கம்தான்,, வாழ்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,,,,, மாண்புமிகு தமிழக முதல்வருக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்,,,தமிழகத்துல ரெண்டே கட்சிதான் பெரிய கட்சி (1)தி.மு.க.(2)அ.தி.மு.க. இதனால பெரிய கட்சியான தி.மு.க"வை ஏன் அன்னாடும் குறை சொல்லுரிங்க குறை சொல்லனுமுனா அனைத்து கட்சிகளையும் குறை சொல்லவேண்டும்.? இன்றைக்கு தமிழகத்தில் மின்சாரம்,தண்ணீர், விவசாயம்,,இது மூணும் உயிரோட கிடையாது....மனிதர்களும் தற்கொலையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்,,,,இதை தடுக்கு தமிழகரசு கடுமையாக முயற்ச்சிக்க வேண்டும்,..., மின்சாரம்,தண்ணீர், விவசாயம்,.இந்த மூணும் இயல்பு வாழ்க்கையில் வர வேண்டுமென்றால் அனைத்து கட்சியும் கூட்ட வேண்டும்,,,தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க.
Water scarcity in Tamil Nadu can be solved if we take our own measures: 1) We need to allow space for water. Instead, what we are doing now is filling the rivers and their floodplains with soil and building apartments. We don't need big dams like the one in Mettur. Instead, we need thousands of ponds and lakes throughtout the state. With little flood risk, this will solve our problem. Ofcourse, we need rain. We dep a lot on seasonal rainfall. But, we are not ready to give this space for ponds and lakes. Instead, we want to make money out of the land. 2) Palar river is the 3rd worst polluted river in the world. palar suffers from heavy metal pollution from tanneries and extensive river bed sand mining to supply for building constructions to all the south indian states. We call this river as dead river. Rich people living beside this river can afford to buy the CAN water to use but think about the poor. They drink this polluted water and suffer from diseases. It doesn't there. Health problem affects their family by changing their economic situation. Already poor. So what will they do to survive? All the poor living next to Palar are environmental refugees. 3) Sustainability. I assume many of you already know this from Thirukkural. Whatever we do, we should look at its impact on environment, society and economics. But, currently, our growth model is only economically focussed. Both, the environment and society are getting exploited now. We should put our environment and society first and then only economics should come. We all earn lot of money without thinking much about our environment and our social life. The hard earned then spent for medical treatment and buying medicines. What is the use of living like this?
திமுகவிற்கு சட்ட மன்ற தேர்தலில் ஒட்டு போட்டால் மாநிலத்தை சுரண்டுகிறார்கள்.. மத்தியிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தால் தமிழக வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்று ஒட்டு போட்டால் நாட்டையே சூறையாடி ராசாங்கம் நடத்துகிறார்கள்..இனி திமுகவை கபில் சிபல் சொன்னது போல் ஜீரோ லாஸ் ஆக்கி சுத்தமாக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பூஜ்யதைதான் பரிசாக கொடுக்க வேண்டும் அப்போதுதான் தமிழ் நாடு முன்னேற வாய்ப்பு..
அங்க கர்நாடகாகாரன் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று ஒற்றுமையாக சொல்கிறார்கள்..... இங்க அரசிதழில் வெளியிட்டால் எந்த கட்சி அதற்கான பலனை தட்டிக் கொண்டு போய் ஓட்டாக மாற்றி வரும் பாராளுமன்ற தேர்தலில் இடங்களை அள்ளலாம் என்று சண்டை போடுகிறார்கள்..... மொத்தத்தில் இரண்டு கட்சிகளுக்குமே காவிரி நீரை பெறுவதிலோ, விவசாயிக்கு உதவுவதிலோ அக்கறை கிடையாது..... ஒரு செயல் நடந்தால் அது நல்லது என்றால் தன்னால் தான் ஆனது என்று சொல்வதிலும், கெட்டது என்றால் அடுத்தவர் மீது பழியை போடுவதிலும் இரண்டு பேரும் சளைத்தவர்கள் அல்ல.....
நமது முதல்வர் அவர்கள் மோடியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய வுள்ளது....அவர்தான் இன்றைக்கு காங்கிரசுக்கு இந்திய அளவிலான எதிரி...ஆனால் அவர் எப்போதும் இப்படி புலம்பி கொண்டிருப்பதில்லை....காரணம் அவரிடம் நிர்வாக திறமை...தன்னம்பிக்கை..உழைப்பு..அறிவு..மாநிலத்தில் உள்ள மற்ற கட்சியினரையும் அரவணைத்து செல்லும் மனப்பான்மை என எல்லாமே இருக்கிறது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.