சென்னை: "குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, இலங்கை முதல் ஆந்திரா தெற்கு கடற்கரை வரை நீண்டு இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சில நாட்களுக்கு முன், தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்ததால், கடந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல், விட்டு விட்டு மழை பெய்தது.
சில இடங்களில், கனமழை பெய்தது. அதிகபட்சமாக, காரைக்காலில், 4, நன்னிலம், நாகையில், தலா, 3, அண்ணா பல்கலை, சென்னை விமான நிலையம், திருவாரூர், கொள்ளிடம், பொன்னேரி, குடவாசல், வலங்கைமானில், தலா, 2 செ.மீ., மழை பதிவானது. கடலில், வடகிழக்கு திசையில் இருந்து, மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், பலமான காற்று வீசியதால், கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், ராமேஸ்வரம், பாம்பன், திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பல இடங்களில், மீன்பிடி துறைமுகங்களில், படகுகள் கடலுக்குள் செல்ல வில்லை. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடற்கரை மற்றும் ஆந்திராவின் தெற்கு கடற்கரை வரை, நீண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, அடுத்த, 48 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், தென் கடலோர மாவட்டங்களில், சில இடங்களிலும், மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் மழை, விட்டுவிட்டு பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில், தரைக்காற்று அவ்வப்போது பலமாக வீசும். இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.