my way separate: rajini | அரசியலுக்கு இழுக்கிறோம்: கருணாநிதி - என் வழி தனி வழி: ரஜினி | Dinamalar
Advertisement
அரசியலுக்கு இழுக்கிறோம்: கருணாநிதி - என் வழி தனி வழி: ரஜினி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:""அரசியலில் நான் நுழைந்தால், என் வழி தனி வழி,'' என, ரஜினியும், ""ரஜினியை மறைமுகமாக அரசியலுக்கு இழுப்பதில் தவறு இல்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கூறினர்.

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின், 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு நூலாக தயார் செய்யப்பட்டது. இந்நூலை, கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாய், லட்சுமி அம்மாள் பெற்றுக் கொண்டார். இதற்கான விழா சென்னையில், நேற்று மாலை நடந்தது.இதில், கருணாநிதி பேசியதாவது:

தமிழகத்தில், 1996, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களின் போது கூட்டணிகள் மாறின. ஆனால், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் சிதம்பரம் இருந்தாலும், அவர், தி.மு.க.,வை ஆதரித்தார். 1996ம் ஆண்டு தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகவும், வெற்றிபெறவும் பெரும் துணையாக இருந்து சாதித்துக் காட்டியவர் சிதம்பரம்.அந்தத் தேர்தலில், ரஜினி மறைமுக ஆதரவு தெரிவித்தார். அதேபோல், அவரை அரசியலுக்கு மறைமுகமாக இப்போது இழுக்கிறோம். நேரடியாக இழுத்தால் தான் தவறு; மறைமுகமாக இழுத்தால் தவறில்லை.

சேது கால்வாய்:தமிழகத்தின் வணிகம், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை வளமாக்கும், சேது கால்வாய் திட்டம், பல போராட்டங்களுக்குப் பின் உருவாகி, பல ஆண்டுகள் கழித்து, அமல் செய்யப்பட்டது. இருந்தும், அத்திட்டம் நிறைவு பெறாமல், கிடைப்பில் போடப்பட்டுள்ளது.

சேது கால்வாய் திட்டம், ஒரு கட்சிக்கு எதிரான போராட்டம்அல்ல. அத்திட்டத்தை, நிறைவேற்றுவதும் ஒரு சாராருக்கு எதிரானது அல்ல. தமிழகத்தின் பொருளாதார, வணிக வளர்ச்சிக்காக நிறைவேற்றுகிறோம். கிடப்பில் உள்ள திட்டத்தை, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு உள்ளது. அவர், இப்பொறுப்பை நிறைவேற்றினால், தமிழகத்தின் வரலாற்றில் அழியாத இடம் பிடிப்பார்.

மத்திய அரசின் இணை அமைச்சர், கேபினேட் அமைச்சர் என, உயர்ந்த அவர், அடுத்ததாக, பிரதமராக உயர வேண்டும். சேலை கட்டிய தமிழன் பிரதமர் ஆவதை விட, வேட்டி கட்டிய தமிழன், பிரதமராக வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

என் வழி தனி வழி:முன்னதாக ரஜினி பேசுகையில், ""1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நானும் சிறிய பங்காற்றியுள்ளேன். அப்போது, சிதம்பரத்துடன் ஏற்பட்ட நட்பு, இப்போதும் தொடருகிறது. அவர் கூட, எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என, ஒரு ரசிகர் போல் கேட்கிறார். நான் அரசியலுக்கு வந்தால், என் வழி தனி வழி,'' என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல், தமிழறிஞர் அவ்வை நடராசன், பேராசிரியர் அப்துல்காதர், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட பலர், விழாவில் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிதம்பரம், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா துவங்குவதற்கு முன், அவரது தலைமையில், டில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (163)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun Ra - Chennai,இந்தியா
31-டிச-201211:56:40 IST Report Abuse
Arun Ra சேலை கட்டிய தமிழன் பிரதமர் ஆவதை விட......இந்த பயம் போதும் ....கண்டிப்பா ஒரு சேலை கட்டிய தமிழன் தான் அடுத்த பிரதமர்
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
31-டிச-201210:52:12 IST Report Abuse
R.Saminathan திரு.ரஜினிகாந்த் அவர்களே நீங்க ஒரு நல்ல நடிகர்...,அவ்வளவுதான்.? நீங்க மக்களுக்கு மறைமுகமாக உதவிகள் செய்து வருவதாக கேள்விப்பட்டேன் அதுக்காக உங்க காலில் நான் விழுகிறேன்,,,இந்த மாறி உதவி உங்க வம்சம் எப்போதும் மக்களுக்கு செய்து வரணும்,,,இதுதான் நல்ல வழி,,,வீனா அரசியலுல வந்து உங்கள நீங்களே கெடுத்துக்காதீங்க,,,.உங்கள நான் திரையில மட்டும்தான் காணுவேன்,,,எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டேன்,,,ஏழை எளிய மக்களுக்கு நீங்க எப்போதும் நல்லவர்தான்,,,,மக்களுடைய பாசம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்,,,
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
Rajkumar - Chennai,இந்தியா
30-டிச-201218:28:35 IST Report Abuse
Rajkumar முதலா நடிகன் பிண்ணாடி போறதா தமிழ்நாடு மக்கள் விடுகிறார்களோ அப்போதான் தமிழ்நாடுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைப்பான், தமிழ்நாடு முட்டாள் மக்களிடம் கேட்கிறான் தமிழ்நாடில் 80 % விவசாயம் தான் தொழில் , அத்தேபோல் என்று படித்துவிட்டு IT , தொழில்துறை என வேலைசெயும் அனைவரும் விவசாயின் பிள்ளைகள் என்பதை மறந்து ஒரு இயக்குனரால் உருவாக்கபடும் நடிகன்தான் இந்த ரஜினி etc ., ஆகையால் இனிமேலாவது uthattirkku sayam ஏத்தும் நடிகன் பின்னாடி போக்காமல் உன் தாய், தந்தை அறிவாளிகள் என் தலைவன், என்னுடைய முன்மாதிரி என்று நினைத்து உழைக்கும் வர்க்கத்தில் இருந்து ஒருவனை தலைவனாக தேர்ந்தேடுகிரிகளோ அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்கள் சந்தோசமாகும் , நிம்மதியாகும் வாழமுடியும் மற்றும் நம்மை ஆளலும் தமிழனா என்பது முக்கியம் அப்போளுதுதான் தமிழனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமையும் கிடைக்கும்.
Rate this:
3 members
4 members
42 members
Share this comment
Cancel
Chandru K - Paris,பிரான்ஸ்
30-டிச-201218:21:27 IST Report Abuse
Chandru K அமரர் எம்.ஜி.ஆர். மாதிரி....... துணிவு, மக்கள் மேல் உண்மையான பாசம், எந்த துறையிலும் சவாலாக சாதிக்கும் குணம் போன்றவை, திரு ரஜினிக்கு கிடையாது....... திரைப்பட துறையில் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்....... ஆனால் அரசியலில் இவர் ஒரு பவர் ஸ்டார்....... இந்த உண்மை திரைப்பட துறையில் தன்னை திறம்பட விற்க தெரிந்து இருக்கும் சூப்பர் பிசினஸ் மேன் திரு சிவாஜிராவுக்கு தெரியும்........ இவர் வணங்கும் ராகநேதிரர், இமய மலையில் ஒளியாக காட்சி கொடுக்கும் பாபா போன்றோர்களே இவர் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் திரைப்பட துறையிலேயே அவர்கள் பெயரில் எடுத்த படங்களுக்கே பெப்பே காட்டியதால்....... கோச்சடையான் படத்துக்கு ஒரு விளம்பரம், ரசிகர்களை தக்க வைத்து கொள்வதற்கு ஓர் யுக்தி இவருக்கு கடைசி கால கட்டத்தில் தோல்வி அடைய கூடாது என்று இந்த மாதிரி பேச்சுக்கள் மூலம் எச்சரிக்கையாக இருக்கும் இவர்...... "எந்திரன்" அல்ல பாராட்டுக்குரிய "மனிதன்"
Rate this:
3 members
2 members
50 members
Share this comment
Vaithianathan Vadivel - Pondicherry,இந்தியா
30-டிச-201220:09:10 IST Report Abuse
Vaithianathan Vadivelசூப்பர் அப்பு....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-டிச-201216:08:48 IST Report Abuse
தமிழ்வேல் ஒரு தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று எதிர் பார்ப்பதைவிட ஒரு நல்ல இந்தியன் பிரதமாராக வேண்டும் என்று எதிர்பார்ப்பதே சரியானதாகும்...
Rate this:
7 members
0 members
36 members
Share this comment
Cancel
enna koduma saravanan - california,யூ.எஸ்.ஏ
30-டிச-201215:18:53 IST Report Abuse
enna koduma saravanan சும்மா இருக்கற ரசிகனை இப்படி எதாவது சொல்லி உசுபேத்த வேண்டியது...அப்புறம் கேட்டா மேல கைய தூக்கி ...எல்லாம் அவன் கிட்ட இருக்குனு சொல்லி escape ஆக வேண்டியது...அட போங்கப்பா..
Rate this:
1 members
0 members
35 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-டிச-201214:38:14 IST Report Abuse
villupuram jeevithan கர்நாடகாவிடம் தண்ணீரை மட்டும் எதிர் பார்க்கவில்லை தமிழன் அரசியல் நடத்தவும் வெற்றி பெறவும் அவனது உதவி தேவை படுகிறது. அதான் இந்த அழைப்பு.
Rate this:
2 members
2 members
16 members
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
30-டிச-201214:35:06 IST Report Abuse
Ravichandran இருவது வருசத்துக்கு முந்தி தமிழர்கள் முப்பது சதவீதம் தான் படித்த பட்டதாரிகள் அப்போ உங்க தனி வழியெல்லாம் எடுபடுச்சு ஆனா இப்போ தமிழர்கள் என்பது சதவீதம் படித்த பட்டதாரிகள் இப்போ நீங்க தனி வழி போன போய்கிட்டே இருகவேண்டிய்துதான் ஒரு பய பின்னாடி வரமாட்டான். பெருசோட பேச்ச கேட்டு ரஜினி ரசிகர்கள் கொஞ்சமும் ஏமாற மாடாங்கன்க்றது என் நம்பிகை. பாவாம் அவர படத்தோட விட்ருங்க.
Rate this:
2 members
1 members
48 members
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
30-டிச-201213:30:02 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் மக்கள் இன்னமும் ஏமாளியா இருப்பார்கள் என்று சினிமா துறை சார்ந்தவர்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள்.இவர்களது நம்பிக்கை பாலபிஷேகம் செய்யும் ரசிகன் இன்னும் இருக்கிறான் என்பது தான். தன் சொந்த வாழ்க்கை இல் தெளிவான நம்பிக்கை முடிவு எடுக்காதவர் இவர் .. மக்களின் நம்பிக்கையே காசக்கியவர்..இனியாவது தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றம் தேவை..
Rate this:
0 members
0 members
27 members
Share this comment
Cancel
Dr. P. Baskaran - pietermaritzburg,தென் ஆப்ரிக்கா
30-டிச-201213:26:16 IST Report Abuse
Dr. P. Baskaran இந்த அரசியல் நடிகர்கள் எத்தனை நாளைக்கு தமிழர்களை ஏமாற்ற போகிறார்கள். தமிழா விழுமுன் எழு, தாய் தமிழையும் தமிழர்களை காப்பாற்று. உன் தாயாக தமிழ் நாட்டை தமிழனிடம் கொடு பிறரிடம் கொடுத்து பின் அவனிடம் அடிமைதனதிளுருந்து விடுபட போராடாதே. விழுமுன் எழு வெற்றி உன் கையில். என் இனிய தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றி. டாக்டர் பொ. பாஸ்கரன், தென் ஆப்ரிக்கா.
Rate this:
0 members
1 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்