new year in china | சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்பாலிவுட் நடன குழுவினர் பங்கேற்பு | Dinamalar

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்பாலிவுட் நடன குழுவினர் பங்கேற்பு

Added : டிச 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்பாலிவுட் நடன குழுவினர் பங்கேற்பு

பீஜிங்: சீனாவில், புத்தாண்டு தினத்தையொட்டி, பாலிவுட் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லை தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும், வர்த்தக ரீதியான உறவுகள் மேம்பட்டுள்ளன. கலாசார ரீதியான உறவுகளை மேம்படுத்த, மத்திய அரசு, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்கிடையே, சீனாவின் பல்வேறு நகரங்களில், பாலிவுட் நடன குழுவினரின் கண்கவர் நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. இதற்காக, சுருதி மெர்சன்ட் மற்றும் அவரது சகோதரி வைபவி ஆகியோர் தலைமையில், 47 பேர் கொண்ட குழு, சீனா சென்றுள்ளது.பீஜிங் நகரில் நடக்கும் இவர்களது, ஐந்து மணி நேர நிகழ்ச்சிகள், சீனாவின் தேசிய, "டிவி'யான "சி.சி.டிவி'யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான, 80 சதவீத டிக்கெட்டுகள் விற்றுள்ளன. சீனா சென்றுள்ள இந்த நடன குழுவினர், ஐந்து நகரங்களில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை