லோக்சபா தொகுதிகளை குறிவைக்கும் மாஜி'க்கள்: தி.மு.க.,வில் பரபரப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

எப்போது வேண்டுமானாலும் வரும் என, எதிர்பார்க்கப்படும், லோக்சபா தேர்தலில், சீட் வாங்கிவிட வேண்டும் என, முன்னாள் அமைச்சர்கள், களத்தில் குதித்துள்ளது, தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய, மூன்று லோக்சபா தொகுதிகளை குறிவைத்து, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர். திருச்சி லோக்சபா தொகுதியில் நிற்க, முன்னாள் அமைச்சர் நேரு விருப்பப்படுகிறார். கட்சி பலமாக உள்ளபோதே, எம்.பி.,யாகி விட்டால், தன்னுடைய எதிர்காலத்துக்கு நல்லது என்ற நினைப்பில், அவர் திருச்சி, எம்.பி., தொகுதியை கைப்பற்ற துடிக்கிறார்.

அதேபோல், புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியும், திருச்சி லோக்சபா தொகுதியில், "சீட்' வாங்கிட பகீரத முயற்சிகளில் இறங்கிஉள்ளார்.கரூர் லோக்சபா தொகுதியை குறிவைத்து, முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி காய்நகர்த்தி வருகிறார். இதனால் தற்போது, அவர் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். அதேபோல் கரூர் தொகுதியை கைப்பற்ற, முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனும் முயற்சிப்பார் என்று தெரிகிறது.

பெரம்பலூர் தொகுதியை, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இவருக்கும், பெரம்பலூரைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும் நல்ல, "நட்பு பாராட்டல்' இருப்பதால், செல்வராஜுக்கு அங்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்று, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

அதேநேரம் ராஜாவுக்கும், பொதுத் தொகுதியாக இருக்கும், பெரம்பலூர் தொகுதியில் நிற்கும் எண்ணம் உள்ளதாம். திருச்சி லோக்சபா தொகுதியை குறிவைக்கும் அமைச்சர் நேருவுக்கு கூட, பெரம்பலூர் தொகுதி மீதும் ஒரு கண் உள்ளது. ஏனென்றால், அவருடைய சொந்த ஊர் பெரம்பலூர் தொகுதியில் தான் உள்ளது."சீட்' வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், திருச்சி, பெரம்பலூர் தொகுதிக்கான, ஆலோசனைக் கூட்டங்களை பிரமாண்டமான முறையில், நேரு நடத்தினார் என்றும், தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர்.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri Gugan - Vandavasi,இந்தியா
30-டிச-201218:35:23 IST Report Abuse
Sri Gugan யார் எங்கு போட்டி இட்டாலும் எப்படி போட்டி இட்டாலும் எங்கள் ஆரணி தொகுதி வெற்றி என்னவோ சின்ன அய்யா அன்புமனிக்குதான்.
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
30-டிச-201217:58:54 IST Report Abuse
Aboobacker Siddeeq இவ்வளவு காலம் சுருட்டிய பணங்களை அள்ளி இறைக்க அரியதோர் வாய்ப்பு... மக்களே...அள்ளுங்கள் பணத்தை...உங்கள் பணம் உங்கள் கையில் வரப்போகிறது....
Rate this:
Share this comment
Cancel
Tamil Payal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-201214:08:20 IST Report Abuse
Tamil Payal இவனுகளுக்கு எல்லாம் என்ன மேனஜ்மென்ட் தெரியும்னு நாட்ட ஆழ துடிக்கிரனுக.... தமிழ் நாடு உருப்படனும்ன இவனுக எல்லாம் பொய் சேரனும்,, படித்த இலைங்கர்கள் ஆட்சிக்கு வரணும்...
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-டிச-201212:32:32 IST Report Abuse
s.maria alphonse pandian பெரம்பலூர் பொது தொகுதியாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த ராசா அவர்கள் அங்கெ துணிந்து போட்டியிட்டு தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யென மக்கள் சக்தியை கொண்டும் நிரூபிக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
30-டிச-201214:14:32 IST Report Abuse
Pannadai Pandianஇந்த மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு பட்டை நாமம் தான் கிடைக்கும். டெல்டா விவசாயிகளுக்கு செய்யும் துரோகம், சில்லறை வர்த்தகத்தில் சிறு குறு வணிகர்கள் முதுகின் குத்திய செயல் உங்களுக்கு நல்ல பாடம் புகட்டும். ...
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
30-டிச-201211:55:39 IST Report Abuse
thirumalai chari பணம் என்ற சக்தியை அழிக்க முடியாது. அந்த சக்தி ஒருபுறம் மறைந்தாலும், மறுபுறம் தோன்றக்கூடியது. வாங்க வாங்க எங்கபணம் எங்களுக்கே திட்டம் இது தானோ??? அ இ அ தி மு க விற்கு இந்த முறையும் செலவில்லா வெற்றி உறுதி தான்.
Rate this:
Share this comment
Cancel
Najumudeen Abdul majeed - Alkhobar ,சவுதி அரேபியா
30-டிச-201211:50:56 IST Report Abuse
Najumudeen Abdul majeed பாவம்க அதிமுக அனுதாபிகள் 40 எங்களுக்கே என்றும், அம்மா நீங்க ஒன்றும் கவலைபடாதீர்கள், நீங்கள்தான் பிரதமர் என்றும் கூத்தடிக்கும் கும்பலுக்கும் இந்த செய்தியால் வயிர் எரியும், அதுமட்டுமல்ல இங்கு தொடர்ச்சியாக சில அதிமுக செம்புகள் (அவர்கள் மட்டும்தான் கருணாநிதியை பற்றி எழுதுபவர்கள்) திமுக என்ற கட்சி தமிழகத்தில் இருந்தது அழிந்துவிட்டது என்று சொல்லிகொண்டிர்க்கும் பொழுது இப்படி சீட்டுக்காக போட்டி போடுகிறார்கள் என்று செய்தி வெளியாகி இருப்பதில் இருந்து திமுக செல்வாக்குடந்தான் இருக்கிறது என்றும் தெளிவாகி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
30-டிச-201208:20:26 IST Report Abuse
Madukkur S M Sajahan ஆனால் எல்லோரும் ராஜாவாகிவிட முடியாது. ராஜா ராஜாதான்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
30-டிச-201206:58:45 IST Report Abuse
ஆரூர் ரங எல்லோருக்கும் டெல்லி பதவி நிச்சயம் . அதிலும் உங்களில் இருவர் ஏற்கனவே டெல்லியின் மையப் பகுதியான திஹாரை வென்றவர்கள். மிச்சம் மீதி குண்டர்களுக்கும் அங்கு அறைகள் தயார்
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
30-டிச-201206:16:02 IST Report Abuse
Tamilselvan எல்ல்ரரும் தோற்க போவது உறுதி பணத்தையும் நிறத்தையும் வீணாக்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
30-டிச-201201:33:58 IST Report Abuse
Panchu Mani கோவிந்தா. கோவிந்தா.
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-டிச-201205:06:50 IST Report Abuse
s.maria alphonse pandianமக்கள் ,திமுகவுக்கு வாக்களித்தால் .,அண்ணா திமுக, கோவிந்தா....அண்ணா திமுகவுக்கு வாக்களித்தால் .,மக்கள் கோவிந்தா...கோவிந்தா ...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
30-டிச-201214:46:29 IST Report Abuse
Pannadai Pandianதிமுகவுக்கு வாக்களித்தால் நாடே திவாலா ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்