லண்டன்: கிறிஸ்துமசுக்கு பரிசாக கிடைத்த மெட்டல் டிடெக்டர் மூலம், பிரிட்டன் சிறுவன், இரண்டாம் உலக போர் காலத்து வெடிகுண்டை கண்டுபிடித்து உள்ளான்.பிரிட்டனின், நோர்போல்க் பகுதியைச் சேர்ந்தவன், சோனி கேட்டர், 7. கிறிஸ்துமசையொட்டி, இவரது தந்தை, மெட்டல் டிடெக்டர் ஒன்றை பரிசாக அளித்தார். இவர்கள் வீட்டை சுற்றி, வயல்வெளி உள்ளது. தற்போது விடுமுறை என்பதால், சோனியும், அவனது சகோதரனும், மெட்டல் டிடெக்டரை வைத்து விளையாடினர். ஒரு இடத்தில், இந்த மெட்டல் டிடெக்டர், "பீப்' சத்தம் எழுப்பியது.சத்தம் வந்த இடத்தில், ஒரு உலோக குமிழ் கிடந்தது. சகதி படிந்து கிடந்த அந்த உலோகத்தை, சிறுவர்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். இதை பார்த்த, சிறுவர்களின் தந்தைக்கு சந்தேககம் ஏற்பட்டது. தன்னுடைய ராணுவ நண்பரை அழைத்து, உலோக குண்டை காட்டினார்.ராணுவ நண்பர், அதை வெடிகுண்டு என, உறுதி செய்தார். இதையடுத்து, போலீசாரிடம் அந்த வெடிகுண்டு ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் உலக போரின்போது, இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.