இணையதளங்களால் மழுங்கடிக்கப்படும் இளைய தலைமுறையினர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லண்டன்: "இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை' தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்,' என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார்."கூகுள்'பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்' என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், இணையதளம் மூலமாகவே, அறிய முயற்சிக்கின்றனர். "இது எப்படி சாத்தியம்; அது என்ன; இதை எப்படி செய்யலாம்' என்பது போன்ற, பல்வேறு கேள்விகளுக்கு, இன்றைய இளைஞர்கள், உடனடியாக, "கூகுள்' இணைய தளத்தை தான், நாடுகின்றனர்.ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என்பது பற்றி, அவர்கள் சிந்திப்பதும் இல்லை; கற்பனை செய்து பார்ப்பதும் இல்லை. இதனால், அவர்களின் மூளை, மழுங்கடிக்கப்பட்டு வறட்சியாகி வருகிறது.அனுபவ ரீதியாகவோ, செயல்முறை சார்ந்தோ, எந்த விஷயத்தையும் அவர்கள் செய்வது இல்லை. இணையதளங்களால், தாங்களாக, சொந்தமாக எதையும் செய்ய முடியாதவர்களாக மாறி வருகின்றனர். இது, அபாயகரமான போக்கு.அடிமைஇணையதளங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உதவி இல்லாமல், அவர்களால் எதையும் செய்ய முடிவது இல்லை. முழுக்க முழுக்க, அவர்கள், இவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர்.எனவே, பள்ளிகளில், குழந்தைகளுக்கான, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக, செயல்வழி கற்றல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். சில மாதிரி பொருட்களை கொடுத்து, "ஒரு பாலத்தை, எப்படி கட்டுவது; இந்த கட்டடத்தை எப்படி வடிவமைப்பது' என, குழந்தைகளை செய்யும்படி கூற வேண்டும்.எதிர்கால தலைமுறை, ஆரோக்கியமான, ஆற்றல் உள்ள தலைமுறையாக வளர்வதற்கு, இது தான் சிறந்த தீர்வாக அமையும்.இவ்வாறு, டிரேவர் பெய்லீஸ் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
True Aruvaa - sarcelles,பிரான்ஸ்
30-டிச-201214:17:16 IST Report Abuse
True Aruvaa இவரின் கூற்றை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை,,உதாரணமாக ஒரு நிகழ்வு,, என் நண்பனுக்கு திடீரென்று கண் பார் குறைந்து சில தினங்களில் முழுமையாக போய்விட்டது ,,அவன் அழ அரம்பித்தான் ,,எனக்கு திரும்ப பார்வை கிடைக்குமா என கேட்டு கேட்டு மன அழர்ச்சி அடைந்தான்,,,எனக்கு அந்த நோய் பற்றிய எந்த அறிவும் இல்லை,, அதனால் அந்த நோய் பற்றிய முழுமையை அறிந்து கொள்ள நான் நாடியது கூகுலைத்தான் ,, கார்னியல் டிசிஸ் பற்றிய விவரங்களை படிக்க அரம்பித்தேன் ,, இரம்ப ஸ்டஜில் அந்நோய் குனமாக கூடியதே என்பதை அறிந்தேன்,,எதோ வய்க்கு வந்ததை அறுதலாக சொல்லாமல் ,, அந்த நொயின் தன்மையை படித்து புரிந்து , இந்த நோய்க்கு இந்திந்த டிரீட்மெண்ட் எடுத்தால் கண்டிப்பாய் இந்த நோய் குணமாக கூடியதே என்று ஒரு உறுதியுடன் ஆறுதல் சொல்ல முடிந்தது,, அவனும் ஒரளவு குணமாகி வருகிறான்,, இந்தளவில் ஒரு நோயின் தன்மையை ஒரளவுக்காவது அறிய எனக்கு இணையம் துணை புரிந்தது அந்த வகையில் இணையத்தின் வருகை நமக்கு நன்மையே,, ஆனால் ஆராய்ச்சியாளர் சொல்வது போல் எதையும் பரிசித்து பார்க்காமல் எதற்கெடுத்தாலும் இணையத்தை நாடுவது தவறானதே,,அது ஒருவரின் சுயசிந்தனையை மூழ்கடிக்கிறது என்பது உண்மையே
Rate this:
Share this comment
Cancel
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
30-டிச-201212:20:50 IST Report Abuse
praven.dr@gmail.com உண்மைதான்... எனக்கு ஒரு கடிதம் எழுத கூட கம்ப்யூட்டர்.. கூகிள் தேவைபடுகிறது...எப்படியோ வேலைமுடிஞ்சாலும் சொந்த கற்பனைக்கு முலைக்கு வேலையில்லாமல் மழுங்கடிக்கதான் படுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்