மதுரை: சிறுவர்கள் மனதில், "சூது' ஆசையை விதைக்கும், "லக்கி பிரைஸ்' (சுரண்டல் பரிசுகள்) விற்பனை, களைகட்டி வருகிறது. உழைக்கும் வர்க்கத்தை சீரழித்த பெருமை, லாட்டரி சீட்டுகளுக்கு உண்டு. அதனால் தான், அரசு தடை விதித்தது. இருந்தும், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை, மறைமுகமாக சில இடங்களில் நடந்து வருகின்றன. விற்பனை தடையால், அடுத்து வரும் தலைமுறையினருக்கு, லாட்டரி சீட்டு பற்றிய சிந்தனை, குறைவாகவே இருக்கும் என்பது ஆறுதலான விஷயம். அதே சமயம், பிஞ்சுகள் மனதில் நஞ்சை கலக்கும், "சூது' விளையாட்டுகளும் ஓய்ந்தபாடில்லை. பள்ளிகளுக்கு முன், "லக்கி பிரைஸ்' விற்கும் கலாசாரம், முன்னர் இருந்தது. "பணம் கொடுத்து அதிலுள்ள சீட்டைச் சுரண்டினால் பரிசு கிடைக்கும்' என்பது, அதன் பொருள். பள்ளி சிறுவர்களுக்கு, அதன் மீது இருந்த மோகம், சுரண்டல் லாட்டரி பக்கம் திரும்பியது. போலீசாரின் கெடுபிடியால், பள்ளிகள் முன், "லக்கி பிரைஸ்' விற்பது கட்டுப்படுத்தப்பட்டது. காலங்கள் கடந்த பின், மீண்டும் தலை தூக்கியுள்ளது, "லக்கி பிரைஸ்' கலாசாரம். பரிசு மோகத்தை தூண்டிவிடும் "டிவி' நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மீண்டும், "லக்கி பிரைஸ்' புழக்கத்திற்கு வந்துள்ளது. இதில் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால், பள்ளி மாணவர்களை குறி வைத்தே, அதன் விற்பனை நடக்கிறது. தற்போது, அரையாண்டுத் தேர்வு விடுமுறை இருப்பதால், தெருக்களில் உள்ள பெட்டிக் கடைகளில், "லக்கி பிரைஸ்' விற்பனை ஜோராய் நடந்து வருகிறது. இம்முறை பணப் பரிசுக்கு பதிலாக, "சில்வர் பாத்திரங்கள், நடிகர்களின் போட்டோக்கள், பென்சில், பேனா' போன்ற, பல விதமான சுரண்டல் பரிசு களுடன் விற்பனைக்கு வந்துள்ளன. "கட்டாயப் பரிசு' என்ற போர்வையில், ஒரு சீட்டை சுரண்டுவதற்கு, ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 110க்கு லக்கி பிரைஸ் சீட்டுகளை வாங்கும் கடைக்காரர், 200 ரூபாய்க்கு விற்கிறார். பரிசு மோகத்தில், பெற்றோருக்கு தெரியாமல் சிறுவர்கள் பணம் எடுத்து வருவது, அதிகரித்துள்ளது. நாளடைவில், இதுவே சூதுக்கு வழிவகுக்கும். பிஞ்சுகள் மனதில், "சூது' விதைத்து வரும், "லக்கி பிரைஸ்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, போலீசார் முன்வர வேண்டும். விடுமுறை நாட்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.