கிறிஸ்துமஸ் விழாவால், கூட்டணி உருவானது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மோதல் வெடித்துள்ளது, தே.மு.தி.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தே.மு.தி.க., சார்பில், முக்கியமான மத பண்டிகைகள் கொண்டாடப்பட்டு, அந்நாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு, ஆட்டிறைச்சி, குர்பானியாக வழங்கப்பட்டது.சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கேக் மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரைவில், பொங்கல் பண்டிகை கொண்டாடவும், கரும்பு, பொங்கல் பொருட்கள் உள்ளிட்டவற்றை, மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கட்சி தலைமை, இது போன்ற விழாக்களை ஏதாவது ஒரு இடத்தில் பிரமாண்டமாக நடத்துவதுடன், அனைத்து மாவட்டங்களிலும், இவ்விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துகிறது.மாநில நிர்வாகிகள் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்த வேண்டிய கடமை, மாவட்ட செயலர்களை சென்று சேர்க்கிறது. அவர்கள், தனக்கு கீழ் மட்டத்தில் உள்ள வட்டம், நகரம், பேரூர், ஒன்றிய செயலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.
இவர்கள் தான் பணத்தை செலவிட்டு, இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். இவர்களோடு மாவட்ட செயலர்களும் இணைந்து விழாவை நடத்தி வந்தனர். சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, இந்த விழாக்களை நடத்துவதில், தே.மு.தி.க., நிர்வாகிகளிடையே எவ்வித பிரச்னையும் எழவில்லை.ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், வருவாய் ஏதும் இல்லாததால், தொடர்ந்து பணத்தை செலவிட முடியாமல், மாவட்ட செயலர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 20 லட்சம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.விழாவிற்கு மேடை, அமைப்பதில் துவங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை, அனைத்திற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட செயலர்களிடம் கட்சி தலைமை ஒப்படைத்தது.
அவர்களும், வழக்கம்போல், தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகளுக்கு செலவுகளை பிரித்து கொடுத்தனர். ஆனால், செலவு செய்ய பணம் இல்லாததால், நிர்வாகிகள் திணறினர். கன்னியாகுமரி மாவட்ட செயலராக இருந்தவர், இதற்கான செலவை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பொறுப்பில் இருந்து விலகி, கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், பிரச்னைக்கு மத்தியில் ஒரு வழியாக இவ்விழா அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நடந்தது.
சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, கேக் மற்றும் பிரியாணி வழங்கும் விழாவை, அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தியது.
கிறிஸ்தவ மத போதகர்கள் முன்னிலையில், இவ்விழா, கட்சியின் தலைமை அலுவலகத்தில் தடபுடலாக நடந்தது. இவ்விழாவின், முக்கிய அம்சமாக லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பது, விஜயகாந்தின் பேச்சில் இருந்து தெளிவானது.
ஆனால், அதே நேரத்தில், இவ்விழாவால், பல மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகளிடையே, உட்கட்சி மோதல் அதிகரித்து உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, மாவட்ட செயலர்கள் உத்தரவிட்டிருந்த நிலையில், பலர் அதை செய்யாமல், தங்களது மொபைல் போன்களை, "ஸ்விட்ச் ஆப்' செய்துவிட்டனர்.இதனால், மாவட்ட செயலர்களே, வேறு வழியின்றி, தங்களது சொந்த செலவில், விழா ஏற்பாடுகளை கவனித்தனர்.
இதனால், மாவட்டங்களில், எவ்வித ஆடம்பரமும் இன்றி, பெயரளவிற்கு இவ்விழா நடந்தது.கடுப்பான மாவட்ட செயலர்கள், சில நிர்வாகிகளை விடாப்பிடியாக, நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர். இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை காட்டிவிட்டு, அந்த நிர்வாகிகள் சென்றுவிட்டனர்.மாவட்ட செயலர்கள் மூலம், இத்தகவல் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள மோதல், கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அடுத்து வரப்போகும் பொங்கல் பண்டிகையை, எவ்வாறு கொண்டாடுவது என, தே.மு.தி.க., தலைமை யோசிக்க துவங்கி உள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுவே திமுக ஆட்சியாய் இருந்து தேமுதிக கூட்டணி கட்சியாய் இருந்தால் எல்லாவிதத்திலும் கொள்ளை அடித்து வயிற்ரை நிரப்ப தலைவர் வழி வகுப்பார். இப்படித்தானே காங்கிரஸ்காரன் முடிந்தவரை ஆட்டையை போட்டான் போன ஆட்சியில். திருமா ......பல நூறு கோடிகளுக்கு அதிபர் ஆனதும் 2009 க்கு முன் பாமக செல்வத்தில் திளைத்ததும் இதனால் தானே. அவருக்கு ஆட்சி ஓட வேண்டும் யார் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் கவலை இல்லை, மக்கள் போண்டியானால் அதை பற்றி எல்லாம் கவலை பட மாட்டார்.
தி.மு.க வுடன் கூட்டணி வைக்கப்போவதால் தே.மு.தி.க.வின் தொண்டர்கள் பலர் கோபமாகவும், வேண்டா வெறுப்பாகவும் உள்ளனர்... இந்த தொண்டர்களே போதும் தி.மு.க.வுக்கு ஆப்பு வைக்க....தி.மு.க.வின் செயல்பாடுளால் குறித்தும், கட்சி நிலவரம் பற்றியும்,,, மத்தியில் காங்கிரசின் நிலை என்ன என்பதையும் தே.மு.தி.க.தொண்டர்கள் அறியாதவர்கள் அல்ல...பாவம் கேப்டனுக்கு அஞ்சி அடக்கி வாசிக்கிறார்கள்... எதில் காட்டனுமோ அதில் நேரம் வரும்போது காட்டுவார்கள்...
கொல்லைகாரனை கண்டு பொது மக்கள் அலறி ஓடுவர் .வெட்கம் இல்லாமல் எப்படி தான் வெளியே வரமுடிகிறதோ ? நம்ம வீட்டுக்கு போலீஸ் வந்தாலே நமக்கு மானம் போகுது ,........இந்த மானமிகுகள் ,மாண்புமிகுகள் ....எப்படிதான் உலா வருகுதோ?
சென்னை மாநகராச்சி மச்ட்டர் (muster roll )கொள்ளை முதல் ,புனித ஜார்ஜ் கோட்டை இலிருந்து செங்கோட்டை வரை கொள்ளையோ கொள்ளை .1972 கோசம் மகன் நடிப்பதோ பிள்ளையோ பிள்ளை ...............அடிப்பது கொள்ளையோ கொள்ளை..நண்பர் மரியாக்கு இந்த கோசம் தெரியும் புரியும் .முத்தழகன்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.