காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஆதிகாமாட்சி என, அழைக்கப்படும், காளிகாம்பாள் கோவிலில், 16 ஆண்டுகளாக திறக்கப்படாமலிருந்த இரும்பு பெட்டகம், அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, அதிலிருந்த நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பின்புறம், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் உற்சவர் சன்னிதி மண்டபத்தில், இரும்பு பெட்டம் ஒன்று இருந்தது. இப்பெட்டகத்தின் சாவி, 25 ஆண்டுகளுக்கு முன், தக்கராக இருந்த திருநாவுக்கரசுவிடம் இருந்தது. அவர், 1996ம் ஆண்டு இறந்தார். அவரது மறைவிற்கு பின், சாவி எங்கிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. அவரது மனைவிக்கும் தெரியவில்லை. இதனால் இரும்பு பெட்டகம் திறக்கப்படாமலே இருந்தது. அதில், விலை உயர்ந்த நகைகள் இருக்கலாம் என, சந்தேகிக்கப்பட்டது. அதை திறந்து பார்க்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) வீரபத்திரன் தலைமையில், செயல் அலுவலர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் சேகர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில், நேற்று மாலை 3:00 மணிக்கு, இரும்பு பெட்டகம் திறக்கப்பட்டது.அதில், தாயாருக்கு அணிவிக்கப்படும் பித்தளை கவசம், சூலாயுதம், தங்க மாங்கல்யம், சந்திர பிறை, பெரிய பொட்டு, வெள்ளி கிரீடம், தகடுகள், காசு மாலை, ஜடைமாட்டி போன்றவை இருந்தன. அனைத்து நகைகளும் கணக்கெடுக்கப்பட்டு, பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் விஜயன் கூறுகையில், ""பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும், இரும்பு பெட்டகத்தில் இருந்தன. இப்பொருட்களின் அப்போதைய மதிப்பு, 56 ஆயிரம் ரூபாய். தற்போதைய மதிப்பு, ஐந்து லட்சம் ரூபாய்'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.