E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வாடிக்கையாளர் வங்கி கணக்கு முடக்கம்: நஷ்டஈடு வழங்க வங்கிக்கு உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2012
23:44

சென்னை: உரிய காரணமின்றி, வங்கி கணக்கை முடக்கியதால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடு வழங்க, "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு' வங்கிக்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. சென்னை, கீழ்ப்பாக்கம், புதிய ஆவடி சாலையைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், மண்ணடி, ராஜாஜி சாலை, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி நிர்வாகத்திற்கு எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: குறிப்பிட்ட வங்கியில், இரண்டு கணக்குகளை வைத்துள்ளேன். கடந்த, 2011ம் ஆண்டு, மார்ச்சில், வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கிறோம் எனக் கூறி, சில அடிப்படை தகவல் களை கேட்டனர். அத்தகவல்களை அளித்த பின்னரும், திரும்பவும் கேட்டனர். வங்கி நிர்வாகம் கேட்ட தகவல்களை, இரண்டாவது முறை பதிவு தபாலில் அனுப்பினேன். அதன் பின்னரும், முன் அறிவிப்பின்றி, 2011ம் ஆண்டு, செப்., முதல் வாரம் வரை, வங்கி கணக்கை முடக்கினர். இதனால், வெவ்வேறு நபர்களுக்கு, நான் அளித்த நான்கு காசோலைகள், திரும்ப வந்தன. வங்கி கேட்ட விவரங்களை அளித்தும், என் கணக்கை முடக்கியதற்கு, நஷ்டஈடாக, 50 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, சென்னை (வடக்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் தயாளன் பிறப்பித்துள்ள உத்தரவில், "வங்கி நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாடு, மனுதாரருக்கு நிச்சயம் மன உளைச்சலை தந்திருக்கும். இதற்காக, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம், மனுதாரருக்கு, 15 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவாக, 2,000 ரூபாயும் வழங்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.