தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கிளப்பிய புயல் இன்னும் ஓயவில்லை. "தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கவும், அரசியல் லாபத்திற்காகவும் முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்' என்றும், தி.மு.க., - காங்., கூட்டணி கருத்து தெரிவித்து உள்ளது.
ஆனால், "இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்' என்று முதல்வர் ஜெயலலிதாவின் கருத்திற்கு ஆதரவாக, பிரதமர் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களில், அ.தி.மு.க.,வினர் இறங்கிவிட்டனர். இந்த இரு தரப்புக்குமிடையே, "ஐந்து ஆண்டு திட்டங்களை, பத்து நிமிடத் தில் விளக்கிட முடியுமா' என்ற சாதாரண மக்களின் குரல்களும் ஒலிக்கின்றன. முதல்வரின் அதிரடி குறித்து, டில்லி அரசியலில் குறிப்பிடத்தக்கவர்களாக வலம் வரும், மூன்று கட்சிகளின் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்...
பழனிமாணிக்கம், நிதித்துறை இணை அமைச்சர்:
பிரதமர் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், சண்டையிட்டுக் கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததால், தமிழகத்துக்கு தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை நடத்துபவர்களும், கூட்டத்தில் பங்கேற்பவர்களும், ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனால் தான், கூட்டம் நடத்துவதற்கான நோக்கத்தை எட்ட முடியும்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அகர வரிசைப்படி அமர வைத்தால், கடைசியில் தான் அமர வேண்டும். அகர வரிசைப்படி தான், பேசவும் முடியும். ஆனால், அவர் முதலில் பேச வேண்டும் என, கேட்டுக் கொண்டதால், பேச அனுமதிக்கப்பட்டார்.மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அமருவதற்கு, ஒரே மாதிரியான "ஸ்டீல்' நாற்காலிகள் தான் போடப்பட்டன. ஆனால், ஜெயலலிதா அமருவதற்கு வசதியாக, வேறு நாற்காலி போட்டுக் கொள்கிறோம் என, தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.அதற்கு அனுமதி அளித்து, டில்லி தமிழ்நாடு ஹவுசிலிருந்து, அவருக்காக பிரத்யேகமாக நாற்காலி கொண்டு வந்து பயன்படுத்தப்பட்டது. இதனால், யாரையும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம், யாருக்கும் இல்லை என்பது தெளிவாகிறது.நாட்டின் மிக முக்கியமான ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஜெயலலிதா, சண்டையிட்டு, தனது உரிமையை நிலைநாட்டி இருக்க வேண்டும். மாறாக, வெளிநடப்பு செய்ததால், அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; தமிழகத்துக்கு தான் நஷ்டம்.ஜெயலலிதா பண்பட்டவராக நடந்திருந்தால், தமிழகத்துக்கு கூடுதல் நன்மைகள் கிடைத்திருக்கும்.
தம்பிதுரை, பார்லிமென்ட் அ.தி.மு.க., தலைவர்:
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்காமல், நிதி வழங்காமல், ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. திட்டங்களை வகுக்கும் அதிகாரம் தான், மத்திய அரசிடம் உள்ளது. அத்திட்டங்களை அமல்படுத்துபவர்கள் மாநில முதல்வர்கள் தான்.இந்நிலையில், மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு, அதன்படி திட்டங்களை உருவாக்குதல், மாறுதல் செய்தல் போன்றவற்றை மத்திய அரசு செய்ய வேண்டும். இதற்கு நேர் எதிராக, தான் சொன்னதைத் தான், மற்றவர்கள் செய்யவேண்டும் என்ற, அதிகார மமதையில் மத்திய அரசு செயல்படுகிறது. பார்லிமென்டில் கூட, உறுப்பினர்கள் பேச நேரம் நிர்ணயிக்கப்படும். ஆனால், அதை கடுமையாக பின்பற்றுவதில்லை.இதற்கு, அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்ற ஜனநாயக முறை தான் காரணம். இந்த ஜனநாயக நடைமுறை, நாட்டின் மிக முக்கியமான, 12வது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு பின்பற்றவில்லை என்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.அரசியல் அமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக முதல்வர், கூட்டத்தின் முதல் நபராக பேசுகிறார். அவரை பேச விடாமல். மணி அடித்து அமர செய்கின்றனர்.கூட்ட அரங்கில் வேண்டுமானால், காங்கிரசார் மணி அடிக்கலாம். ஆனால், அவர்களின் ஆட்சிக்கு, சாவு மணி அடிக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
டி.ராஜா, தேசிய செயலர், இந்திய கம்யூ.,:
கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட நாடு இந்தியா. இங்கு, அனைத்துத் தரப்பினருக்கும், சரிநிகர் சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், கூட்டாட்சி தத்துவத்துக்கே கேடு விளைவிப்பதாகும்.இந்த அடிப்படையில் தான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெளிநடப்பை பார்க்க வேண்டியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, 12வது ஐந்தாண்டு திட்டக் கூட்டம், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ஒரு மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது. இக்கூட்டத்தில் பேச, மாநில முதல்வர்களுக்கு, போதிய கால அவகாசம் அளிக்கவேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தபோது, ஒரு மாநில முதல்வருக்கு, 10 நிமிடங்கள் ஒதுக்கி பேச அனுமதித்துஇருக்கலாம். இன்று நிலைமை மாறியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் வேறு,வேறு கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், உரிய நேரம் ஒதுக்கி, மாநில முதல்வர்களுக்கு, பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்.நேரம் போதாது என, கூறுவதை ஏற்க முடியாது. ஒரு நாள் நடக்கும் கூட்டத்தை, மூன்று நாள்கள் நடத்தலாம். முதல் நாள் முதல்வர்கள் பேசலாம்; அடுத்த நாள், மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதில் சொல்லலாம்; இறுதி நாளன்று பிரதமர் நிறைவுரையாற்றலாம்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது சரியானதே. இதை, மத்திய அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள், தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டங்களில், நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, மத்திய அரசின் கடமை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சின்ன விசயத்த பெருசாக்கிட்டாங்க ஆழும் கட்சிக்காரங்க மற்றும் தி.மு.க., - காங்,,.இப்படி தமிழகத்துல நாமளே சண்ட போட்டுக்கிறோம் இந்த விஷயம் மத்தியரசுக்கு தெரியுமா,,.எதுக்குங்க நமக்குள்ளே நாம சண்டப்போட்டுக்கணும்....இந்த சண்டையால யாருக்கும் லாபமில்லை,,மன வருத்தம்தான் மிஞ்சும்,,,அனைவரும் ஒட்டுக்கா இருப்போம் தமிழகத்துக்கு கட்சிக்காரங்கலான நீங்க மக்களுக்கு உங்களது கடமைகள செயுங்க,,.
ஜெயா நல்லவரோ,கெட்டவரோ தமிழக மக்களின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார். அவரை அவமதிக்க வேண்டும் என்பது முன்பே திட்டமிட்டது போல்தான் தோன்றுகிறது. அதாவது, அவரை முதலில் பேச அனுமதிப்பதுபோல் அனுமதித்து, பேசிக்கொண்டிருக்கும் போது மணி அடித்து அவமானப்படுத்தினால் யாரும் நம்மை தவறாக நினைக்க மாட்டார்கள் என்பதே தி.மு.க., காங்கிரஸ்காரர்களின் திட்டம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அகர வரிசைப்படி அமர வைத்தால், கடைசியில் தான் அமர வேண்டும். அகர வரிசைப்படி தான், பேசவும் முடியும். ஆனால், அவர் முதலில் பேச வேண்டும் என, கேட்டுக் கொண்டதால், பேச அனுமதிக்கப்பட்டார்............. அகர வரிசையில் J எப்போது கடைசி இடத்திற்கு சென்றது. கடைசி எழுத்து Z தானே ? மத்திய நிதித்துறை இணை அமைச்சருக்கு இது கூடவா தெரியவில்லை .
வாழ்க முதல்வர், கூடத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தேசிய வளர்ச்சி கவூன்சில் கூட்டம் நடக்கும் லட்சணத்தை காட்டிவிட்டார், மிகப்பெரிய வளர்ச்சி கூட்டத்தில் முதல்வர்கள் பேச பத்து நிமிடம் தான் அனுமதி விவதாம் இல்லை கூட்டத்தை இரண்டுநாள் கூட நடத்தி பிரச்சனைகளை கலைய வக்கு இல்லை, காங்கிரஸ் அரசு நடத்தும் லட்சணத்தை மீண்டும் தேசம் முழுவதும் காட்டி விட்ட அம்மாவிற்கு வெற்றிதான். இதற்கு தினம் ஒரு அறிக்கை மற்றும் அட்டு கேள்வி அட்டு பதில் எழுதும் ரிட்டைர் பெருசுக்குதான் தோல்வி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.