Additional sheet in ration card | ரேஷன் கார்டு உள்தாளில் கூடுதல் இடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டு உள்தாளில் கூடுதல் இடம்

Added : டிச 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரேஷன் கார்டுகளில், 2013 - 14 ம் ஆண்டுக்கு, பொருட்கள் வாங்க இணைக்கப்பட்ட உள்தாளில், அரசு நலத்திட்ட பெயர்களுக்கான கூடுதல் பகுதிகள் இடம் பெற்று உள்ளன. கடந்த, 2005 - 10ம் ஆண்டுக்கான ரேஷன் கார்டுகள், 2011, 12ல் புதுப்பிக்கப்படவில்லை; அவற்றில், உள்தாள்கள் இணைக்கப்பட்டன. மேலும், 2013 - 14 ம் ஆண்டிற்கும், மீண்டும், உள்தாள்கள் இணைத்து நீடிப்பதாக, அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக, உள்தாளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் என, பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால், 2013 - 14ம் ஆண்டுக்காக உள்தாளில், இலவச வேட்டி, சேலை, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், அரசு காப்பீடு திட்டம், கால்நடைகள், உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற நலத்திட்டங்களும், இடம் பெற்றுள்ளன. இத்தாள்கள், ஜன., 2ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை