காரைக்குடி: "உலகம், வெப்பமயமாதலை தடுக்க, பாசியில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் முறை, இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட உள்ளது' என, காரைக்குடியில் நடந்த "பசுமை உயிர் சக்தி' கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, தாவரவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், சென்னை பல்கலை, "தாவரவியல் உயிர் ஆய்வு மைய' இயக்குனர் ரங்கசாமி பேசியதாவது: வெளிநாடுகளில் இருந்து, ஆண்டுக்கு 200 மில்லியன் டன் பெட்ரோலியம் இறக்குமதி செய்கிறோம். இதனால், சுற்றுச் சூழல் மாசு படுகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, எரிபொருளை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கு, கடல்நீரில் வளரக்கூடிய, "நானோ குளோராப்சிஸ்', நன்னீரில் வளரக்கூடிய "போர்ட்ரியோ காக்கஸ் பிரவுனி' வகை பாசிகளை வளர்த்து, பெட்ரோலியத்தை பிரித்தெடுக்கலாம். இந்த வகை பாசிகள் மூலம் தயாரிக்கப்படும், பெட்ரோலிய பொருட்களை, எரிசக்திக்கு பயன்படுத்தும் போது, அது வெளியிடும், "கார்பன் டை ஆக்சைடு' வாயு, இந்த வகை பாசிகளால் கிரகிக்கப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடாமல், வெப்பமயமாதல் தடுக்கப்படுகிறது.
நுண்ணிய பாசிகள் ஒரு ஹெக்டேரில், ஒரு ஆண்டுக்கு, 225 டன் வரை உற்பத்தி செய்ய முடியும். காட்டாமணக்கு, 75 டன் மட்டுமே விளைவிக்க முடியும். தற்போது, நன்னீரில் வளரக்கூடிய, "போர்ட்ரியோ காக்கஸ் பிரவுனி', தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், சோதனை முறையில் விளைவிக்கப்பட்டது. ஆந்திராவில் விளைந்த பாசியில், அதிக அளவாக, 24 சதவீதம் கொழுப்பு உள்ளது. இவற்றிலிருந்து, "பயோ டீசல்' பிரித்தெடுக்கலாம். மீதமுள்ள 76 சதவீத பாசியில், சர்க்கரையும், புரதமும் உள்ளன. சர்க்கரையை "பை எத்தனலாக' மாற்றி, அவற்றையும் எரிபொருளாக பயன்படுத்தலாம். புரதம், கோழித் தீவனம் உள்ளிட்டவைக்கு பயன்படுகிறது. உப்பளத்திலிருந்து, பிரித்தெடுக்கப்பட்ட "நானோ குளோராப்சிஸ்' என்ற மிக நுண்ணிய பாசியை, 120 மீட்டர் சதுர பரப்பில், 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரில் வளர்த்து, 20 நாள் முடிவில், 42 கிலோ, உலர் எடை கொண்ட பாசியை எடுக்கலாம். இதில், 30 சதவீதம் பெட்ரோலியம் பிரித்தெடுக்கலாம்.
இந்த பெட்ரோலியத்தை, தற்போது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் வாங்க முன்வந்ததுடன், அதற்கான ஆராய்ச்சியிலும் பங்கெடுத்துள்ளது. இதில், கடந்த ஐந்து ஆண்டு ஆய்வுக்கு, "அபான் இன்ப்ராஸ்ட்ரக்சர்' என்ற நிறுவனம், 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சென்னை பல்கலை, ஆஸ்திரேலியா மொடாக் பல்கலையில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. பிரேசிலில், இந்த நடைமுறை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோலுடன் 5 சதவீதம் "எத்தனால்' கலந்து பயன்படுத்த, ஏற்கனவே மத்திய அரசு, உத்தரவிட்டுள்ளது. கரும்பு மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து, "எத்தனால்' தயாரிப்பதால், அதிலிருந்து கிடைக்க கூடிய உணவுப்பொருட்களின் பற்றாக்குறை உள்ளது. மேலும், "எத்தனாலை' வாகனங்களில், உபயோகப்படுத்த கூடாது என, ஐ.நா., சபை உத்தரவிட்டுள்ளது, எனவே எதிர்காலத்தில், பெட்ரோலிய தேவையை சரிகட்டுவதில், பாசியின் பங்கு அளப்பரியது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.