திருச்சி: இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, கோவில் மானிய நிலம், "ப்ளாட்' போட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதை, அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் குருநாத கோவிலுக்கு சொந்தமான கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவில் பூசாரிகளாக சாமிநாதன், அர்ச்சுனன் ஆகியோர் உள்ளனர்.கோவிலுக்கு சொந்தமாக, துவரங்குறிச்சியில், 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு, 50 கோடி ரூபாய்.
கோவில் பூசாரிகளாக இருக்கும் சாமிநாதன், அர்ச்சுனன் ஆகியோர் அனுபவத்தில் கோவில் நிலம் இருந்து வருவதால், அவற்றை, 1990ம் ஆண்டு முதல், "ப்ளாட்' போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இது கோவிலை நிர்வகிக்கும் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
துவரங்குறிச்சி குருநாத கோவிலுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலமும் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டு, அந்த பகுதி முழுவதும் வீடுகள் கட்டப்பட்டு விட்டன. அந்த வீடுகளுக்கு பொன்னம்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அனுமதி அளித்து, வீட்டு உரிமையாளர்களிடம் சொத்து வரியும் வசூலித்து வருகிறது.இதேபோல், கோவிலுக்கு சொந்தமான மற்ற நிலங்களும் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள், ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டது குறித்து, அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கோவில் நிலங்களை விற்பனை செய்ய, சில அரசியல்வாதிகளும், இந்து சமய அறநிலைத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலரும் உடந்தை என்பதால், இது தொடர்பாக எத்தனை புகார் சென்றாலும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
தமிழகம் முழுவதும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக் கப்பட்டிருந்தால், அவற்றை கைப்பற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற, முதல்வர் ஜெயலலிதா கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் கோவில் நிலம் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் நிலத்தை விதிமுறைகளை மீறி விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தை யாக இருந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், விற்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. அப்போது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என, தெரிகிறது..
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு : இப்படியாக கோயில் நிலம் முழுவதும் பிளாட் போடப்பட்டு விற்று ஏப்பம் விட்டால் கோவிலில் இருக்கின்ற சாமி நடுதெருவுக்கு வந்து விடும். இப்பவே விநாயகர் மரத்துக்கடியிலதான் இருக்கிறார். பிறகு விஷ்ணு, சிவன், அம்மன், முருகன் , இப்படி எல்லாரும் வீதிக்கும் நடுதெருவுக்கும் வந்துட்டா அறநிலைய துறை இல்லாமலே போய்டும். அரசாங்க வேலைதானே வேற வேலை கொடுக்காமலா போய்டுவாங்க. கடவுளுக்கே இந்த நிலைமை என்றால் ஏன் 2012 ல உலகம் அழியுதா இல்ல 2013 ளையான்னு பயந்துகிட்டு கடக்குறோம். அப்புறம் விஷ்ணு பூபிய பிளந்துகிட்டு போனா நில நடுக்கமும், கடலுல போனா சுனாமியும், சிவன் கோபபட்டா எரிமலை சீற்றமும் ஏற்படாது.
முதல்வரே உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். தமிழக மக்களும் அப்படித்தான். இந்த வீட்டு மனை போடுகிறவர்களை அவர்களின் செயல்களை தடுத்து நிறுத்துங்கள். விளைநிலங்கள், ஏறி குளங்கள் என அனைத்தையும் ஒழித்துக்கட்டாமல் அவர்கள் விடமாட்டார்கள். அவர்களை விட்டால் ஒரு நெர்ச்செடி விளைவதற்கான நிலம் கூட இந்த மண்ணில் இருக்காது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.